4 குழந்தைகள் உட்பட ஐவர் தீவிபத்தில் பலி

4 குழந்தைகள் உட்பட ஐவர் தீவிபத்தில் பலி

1 mins read
c7a63c3c-7173-4dce-9b80-fcd6a0d6973b
-

லக்னோ: உ.பி. மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள கிராமத்தில், குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி மாற்றுத் திறனாளி பெண்ணும் அவரது நான்கு குழந்தைகளும் உயிரிழந்தனர். ஷேக் முகம்மது என்பவரின் மனைவி பாத்திமா, 30, குழந்தைகள் ரோகி, 6, அமினா, 4, ஆயிஷா, 2, இரண்டு மாத குழந்தை கதீஜா ஆகியோர் வீட்டில் தூங்கியபோது தீவிபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.