அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில் உள்ள சீக்கியர் களின் புனிதத் தலமான பொற் கோயில் அருகே நேற்று இரவு ஒரு மணி அளவில் மீண்டும் மர்மப்பொருள் பயங்கரச் சத்தத் துடன் வெடித்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாநில காவல்துறைத் தலைவர் கெளரவ் யாதவ் தெரி வித்துள்ளார்.
அமைதியைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்த்தப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அவர், பட்டாசு தயாரிக்கும் பொருள் களைக் கொண்டு குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ள தாகவும் கூறியுள்ளார்.
முதல் வெடிப்பு மே 6ஆம் தேதியும் இரண்டாவது வெடிப்பு கடந்த 8ஆம் தேதியும் நடந்தன.
நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் பிரபல சுற்றுலாத் தலமான பொற்கோயிலுக்கு அருகிலுள்ள ஹெரிடேஜ் தெருவி லிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் நடைபெற்றுள்ளது.
தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகளும் பஞ்சாப் காவலர்களும் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் கிடைத்த தடயவியல் மாதிரிகளைச் சேகரித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
கடந்த ஐந்து நாள்களில் தொடர்ந்து மூன்றாவது முறை யாக இதுபோல் பொற்கோவிலுக்கு அருகில் மர்மப் பொருள்கள் வெடித்துள்ள சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

