கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைக்க வாய்ப்பு

2 mins read
c04719e2-8f2c-4de1-9128-106fd81cb9f8
-

நாளை தேர்தல் முடிவு; வெற்றி, தோல்வி, எதிர்பார்ப்புகளைப் பகிர்ந்துகொண்ட தலைவர்கள்

பெங்களூரு: கர்­நா­ட­கா­வில் காங்­கி­ரஸ் கட்சி ஆட்­சி­ய­மைக்க கூடுதல் வாய்ப்­புள்­ள­தாக தேர்­த­லுக்­குப் பிந்­தைய கருத்­துக்­கணிப்பு விவரங்கள் குறிப்பிட்டு உள்ளன.

இம்மாநி­லத்­தின் 224 தொகு­தி­களிலும் 73% வாக்­கு­கள் பதி­வாகி உள்­ள­தாக தேர்­தல் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது. வாக்­கு­கள் நாளை எண்­ணப்­பட உள்­ளன.

113 இடங்­களில் வெற்றிபெறும் கட்சி தனிப்பெரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைக்க முடி­யும். ­

இந்நி­லை­யில், தொலைக்காட்சி கள், செய்தி நிறுவனங்கள் உள் ளிட்ட பெரும்­பா­லான ஊட­கங்­கள் வாக்­குப்பதி­வுக்குப் பிந்­தைய கருத்­துக்­கணிப்புகளில் காங்­கி­ர சுக்கு கூடு­தல் இடங்­கள் கிடைக்­கும் என்று தெரி­வித்­துள்­ளன.

டிவி 9: பாஜக 88-98 தொகு­தி­களும் காங்­கி­ரஸ் 99-109 தொகு­தி­களும் மதச்­சார்­பற்ற ஜனதா தளம் (மஜத) 21-26 தொகு­தி­களும் கைப்­பற்­ற­லாம் எனத் தெரி­வித்­துள்­ளது.

ஜீ நியூஸ்: பாஜக 79-94, காங்­கி­ரஸ் 103-118, மஜத 25-33 தொகு­தி­கள் வெல்ல வாய்ப்­புள்­ளது எனக் கணித்­துள்­ளது.

டைம்ஸ் நவ்: பாஜக 78-94, காங்­கி­ரஸ் 106-120, மஜத 20-26 தொகு­தி­கள்வரை கைப்பற்றலாம்.

ரிபப்­ளிக் டிவி: பாஜக 85-100, காங்­கி­ரஸ் 94-108, மஜத 24-32 தொகு­தி­கள் வெல்ல வாய்ப்­புள்­ளது என்று கணித்­துள்­ளது.

ஜன் கி பாத்: பாஜக 94-117, காங்­கி­ரஸ் 91-106, மஜத 14-24 இடங்களும் வெல்ல வாய்ப்­ புள்ளதாகக் கணித்­துள்­ளது.

நியூஸ் நேஷன்: பாஜக 114 தொகு­தி­க­ளி­லும் காங்­கி­ரஸ் 86 தொகு­தி­க­ளி­லும் மஜத 21 தொகு­தி­க­ளி­லும் வெல்ல வாய்ப்­புள்­ளது என்று கணித்­துள்­ளது.

ஆசியா நெட்: பாஜக 94-117, காங்­கி­ரஸ் 91-106, மஜத 14-24 தொகு­தி­கள் வரை­ வெல்லும்.

கருத்துக்கணிப்­பில் எட்டு நிறு­வ­னங்­களில் ஐந்து நிறு­வ­னங்­கள் காங்­கி­ரஸ் வெற்றி பெறும் எனக் கணித்­துள்­ளன. இருந்­தா­லும், தனிப்­பெ­ரும்­பான்­மை­யு­டன் ஆட்சி அமைக்­காது என்றும் கூறியுள்ளன.

இதுகுறித்து, செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முன்­னாள் முதல்­வர் எடி­யூ­ரப்பா, "மக்களின் நாடித் துடிப்பை நான் அறிவேன், அறுதிப் பெரும்பான்மையுடன் 115 இடங்களுக்கு மேல் பெற்று பாஜக மீண்­டும் ஆட்சி அமைக்­கும்," என்றார்.

"மஜத 25 இடங்­க­ளைக் கைப்­பற்­றும்," என முன்­னாள் முதல்­வர் குமாரசாமி நம்­பிக்­கைத் தெரி­வித்துள்­ளார்.

"146 தொகுதிகளில் வெற்றி பெறு­வோம்," என கர்­நா­டக மாநில காங்­கி­ரஸ் தலை­வர் டி.கே. சிவக்­கு­மார் கூறி­யுள்­ளார்.

கருத்துக் கணிப்பு முடிவு களை நிராகரித்துள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.