மகளைக் காக்க சிறுத்தையுடன் போராடிய பெற்றோர்

1 mins read
5ee2924b-1529-4c77-b0d1-d09a9b1d3283
-

பிஜ்­னோர்: உத்­த­ரப்­பி­ர­தேச மாநி­லம், பிஜ்­னோர் மாவட்­டத்­தைச் சேர்ந்­த­வர்­கள் மதன் சிங், 30, அவ­ரது மனைவி சுனிதா தேவி, 27. பிஜ்­னோ­ரில் உள்ள அஸ்பா பாத் சாமன் என்ற கிரா­மத்­தில் விவ­சாய வய­லில் வேலை செய்து கொண்­டி­ருந்­த­னர். அவர்­க­ளது மூன்று வயது மகள் காயத்ரி அரு­கில் விளை­யா­டிக் கொண்டி ருந்­த­போது, ​சிறுத்­தை ஒன்று அவள் மீது பாய்ந்து, இழுத்­துச் செல்ல முயன்­றது.

இதைக்­கண்ட பெற்­றோர் துணிச்­சலை வர­வ­ழைத்­துக் கொண்டு மக­ளைக் காப்­பாற்ற போரா­டி­னர். மதன்­சிங் சிறுத்தை யைக் கழி­யால் தாக்­கி­னார், தாய் தன் காட்­டுக் கூச்­சல் போட்­டார். குழப்­ப­ம­டைந்த விலங்கு அங்­கி­ருந்து தப்­பி­யோ­டி­யது. காய­ம­டைந்து மூச்­சுத் திண­ற­லால் பாதிக்­கப்­பட் சிறுமி மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கி­றார்.

விவ­சாயி சமன் சிங் கூறுகை யில், "அறு­வ­டைக் கால­மாக இருப்­ப­தால் விவ­சா­யி­கள் அதிக நேரம் வயல்­வெ­ளி­களில் செல விடு­கின்­ற­னர். மாவட்­டத்­தில் கடந்த ஐந்து மாதங்­களில் 13 கிராம மக்­கள் கொல்­லப்­பட்­டுள்ள னர். ஆனால் அதி­கா­ரி­கள் எங்­க­ளைப் பாது­காக்­கத் தவ­றி­விட்­ட­னர். இது­போன்ற அலட்­சி­யம் தொடர்ந்­தால், ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் முற்­று­கை­யிட்டு போராட்­டம் நடத்­து­வோம்,'' என்­றார்.