செய்திக்கொத்து

1 mins read
7a3c86d3-ebfc-4697-97d5-005514b63875
-

ஆளில்லா வானூர்தி மூலம் ரத்தம் அனுப்பிவைக்கும் திட்டம் வெற்றி

புதுடெல்லி: ரத்தம் நிரப்பப்பட்ட பைகளையும் மருந்துப் பொருள்களையும் ஆளில்லா வானூர்தி மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (ஐசிஎம்ஆர்) ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஆளில்லா வானூர்தி மூலம் கொண்டு செல்லப்படும் மருந்துகள், ரத்தப் பைகளுக்கு ஏதேனும் சேதம் ஏற்படுகிறதா? வெப்ப நிலைக்கு ஏற்ப அவற்றின் தன்மை மாறுகிறதா? என்பது குறித்து நடத்தப்பட்ட பரிசோதனையில், ரத்தப் பைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படாததால் சோதனை முயற்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ரத்தப் பைகள், மருந்துப் பொருள்களைக் கொண்டு செல்வதற்கு வானூர்திகள் பயன்படுத்தப்படும் என்று ஐசிஎம்ஆர் இயக்குநர் ஜெனரல் ராஜீவ்பால் தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய பட்டியலில் சாந்தி நிகேதன்

புதுடெல்லி: சாந்தி நிகேதனை உலகப் பாரம்பரியப் பட்டியலில் சேர்ப்பதற்கு யுனெஸ்கோவுக்குப் பரிந்துரை செய்துள்ளதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேற்குவங்க மாநிலம், பிம்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சாந்தி நிகேதனில் வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். இந்நிலையில், இவ்வாண்டு செப்டம்பர் மாதம் யுனெஸ்கோ பாரம்பரியப் பட்டியலில் சாந்தி நிகேதனை சேர்ப்பது குறித்த முறையான அறிவிப்பு வௌியாகும் என கிஷன் ரெட்டி கூறியுள்ளார்.