பெண் மருத்துவர் கொலை: கேரளாவில் மருத்துவர்கள் போராட்டம்

1 mins read
67b95f5e-47d2-4101-aa44-6bed47899a3f
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள மாநி­லத்­தின் கொல்­லம் மாவட்­டத்­தில் குடும்­பத் தக­ரா­றில் காய­ம­டைந்த சந்­தீப் என்ற பள்ளி ஆசி­ரி­யர் ஒரு­வரை சிகிச்­சைக்­காக காவல்­து­றை­யி­னர் அரசு மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­னர்.

மது­போ­தை­யில் இருந்த சந்­தீப், தனக்கு சிகிச்சை அளித்த மருத்­து­வர் வந்­தனா தாஸ் (23) என்­ப­வ­ரி­டம் வாக்­கு­வா­தத்­தில் ஈடு­பட்டு அங்­கி­ருந்த கத்­தி­ரிக்­கோ­லால் குத்­திக் கொலை செய்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இச்­சம்­ப­வத்­தைக் கண்­டித்­தும், தங்­க­ளுக்குப் பாது­காப்பு வழங்க வலி­யு­றுத்­தி­யும் மாநி­லம் முழு­வ­தும் அரசு மருத்­து­வர்­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­டுள்­ள­னர்.

அரசு மருத்­து­வ­ம­னை­க­ளுக்கு போதிய பாது­காப்பு வழங்க ஏது­வாக புதிய சட்­டத்தை அரசு உடனே இயற்ற வேண்­டும் என அவர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர்.

புதிய சட்­டம்

இதை­ய­டுத்து, முதல்­வர் பின­ராயி விஜ­யன் தலை­மை­யில் உயர்­நிலைக் குழு­வின் அவ­சரக் கூட்­டம் கூட்டப்பட்டது.

அக்­கூட்­டத்­தில், சுகா­தார அமைச்­சர் வீணா ஜார்ஜ், தலை­மைச் செய­லா­ளர் வி.பி.ஜாய், சுகா­தா­ரம், சட்­டம் மற்­றும் மருத்­து­வக் கல்வி ஆகிய துறை செய­லா­ளர்­கள், காவல் துறை தலை­வர் உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர்.

மருத்­து­வர்­கள் மீது தாக்­கு­தல் நடத்­தப்­ப­டு­வ­தைத் தடுக்க புதிய சட்­டம் இயற்­று­வது உட்­பட பல்­வேறு விவ­கா­ரங்­கள் குறித்து விரி­வாக ஆலோ­சனை நடத்­தப்­பட்­டது. கேரள மாநி­லம் முழு­வ­தும் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் மருத்­து­வர்­கள் அவ­சர சிகிச்சை சேவை­களில் மட்­டுமே ஈடு­பட்­ட­னர்.