தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பதி கோவில் தங்க கோபுரத்தை காணொளி எடுத்தவர் கைது

1 mins read
b16077b2-775e-4d76-b74a-385f7bc3cf82
-

திருப்­பதி: ஆந்­திர மாநி­லத்­தின் திருப்­பதி ஏழு­ம­லை­யான் கோவி­லில் வழி­பட வரும் பக்­தர்­கள் கடும் சோத­னைகளுக்குப் பிறகே சாமியை வழி­பட அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

அவ்­வாறு இருந்­தும், கடந்த 7ஆம் தேதி வழி­பட வந்­தி­ருந்த பக்­தர் ஒரு­வர், சோத­னை­யை­யும் மீறி கோவி­லுக்­குள் தனது கைத்­தொ­லை­பே­சி­யைக் கொண்டு சென்­றார்.

மூல­வர் மீதுள்ள ஆனந்த நிலை­யம் கோபு­ரம் உள்­ளிட்ட பகு­தி­களில் தனது கைத்­தொ­லை­பேசி மூலம் காணொ­ளிப் பதிவு செய்து சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யிட்­டார்.

இந்­தக் காணொளி சமூக வலைத்­த­ளங்­களில் பர­வி­யது. இத­னைக் கண்ட திருப்­பதி ஆலய நிர்­வாக அதி­கா­ரி­கள் கடும் அதிர்ச்சி அடைந்­த­னர். கடு­மை­யான சோத­னை­க­ளை­யும் மீறி அவர் எப்­படி கோவி­லுக்­குள் கைத்­தொ­லை­பே­சியை எடுத்­துச் சென்­றார்.

பாது­காப்­புப் பணி­யில் ஈடு­பட்­ட­வர்­க­ளின் மெத்­த­னப்­போக்­கால் இந்தச் சம்­ப­வம் நடந்­ததா என விசா­ரணை நடத்தி வந்­த­னர். காணொ­ளிப் படம் பிடித்த பக்­தர் குறித்து காவல்­து­றை­யில் புகார் செய்­த­னர்.

காவல்­து­றை­யி­னர் வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வந்­த­னர்.

இந்தச் சம்­ப­வத்­திற்கு பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யி­னர் கண்­ட­னம் தெரி­வித்து போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

கோவி­லின் கண்­கா­ணிப்பு கேமரா காட்­சி­க­ளின் உத­வி­யால் ஓர் ஆட­வரை காவல்­து­றை­யி­னர் கைது செய்து விசாரித்து வரு­கின்­ற­னர். அந்த ஆட­வர் தெலுங்­கா­னா­வைச் சேர்ந்­த­வர் என்­பது தெரி­ய­வந்­துள்­ளது.