24 நிறுவனங்கள் ரூ.11,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

24 நிறுவனங்கள் ரூ.11,000 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

2 mins read
6c0ac61c-3393-4fd0-abbc-46212546ad25
-

அம்பலப்படுத்திய ஜிஎஸ்டி நுண்ணறிவு இயக்குநரகம், வருவாய் புலனாய்வு இயக்குநரகம்

புது­டெல்லி: நாடு முழு­வ­தும் பல்­வேறு பகு­தி­க­ளைச் சேர்ந்த 24 பெரிய இறக்­கு­மதி நிறு­வ­னங்­கள் ஏறத்­தாழ 11 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­வுக்கு பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) ஏய்ப்­பில் ஈடு­பட்­டது அம்­ப­ல­மாகி உள்­ளது.

ஜிஎஸ்டி நுண்­ண­றிவு இயக்­கு­ந­ர­கம் (டிஜி­ஜிஐ), வரு­வாய் புல­னாய்வு இயக்­கு­ந­ர­கம் (டிஆர்ஐ) ஆகி­யவை இந்த வரி ஏய்ப்பை கண்­டு­பி­டித்­த­தாக ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

இந்த வரி ஏய்ப்பு தொடர்­பாக ஏழு வெவ்­வேறு துறை­கள் சார்ந்த நிறு­வ­னங்­க­ளுக்கு விளக்­கம் கேட்டு நோட்­டீஸ் அனுப்பி உள்­ள­தா­க­வும் ஜவு­ளித்­துறை மட்­டு­மல்­லா­மல், எஃகு, மருந்து, நகை­கள் ஆகி­ய­வற்­று­டன் தொடர்­புள்ள நிறு­வ­னங்­கள் இந்த வரி ஏய்ப்­பில் ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் மேற்­கு­றிப்­பிட்ட இயக்­கு­ந­ர­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.

கடந்த இரு­பது நாள்­களில் மும்பை, கோல்­கத்தா, சென்­னை­யில் உள்ள இறக்­கு­ம­தி­யா­ளர்­க­ளுக்கு விளக்­கம் கோரி நோட்­டீஸ் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும் தற்­போது வரி ஏய்ப்பு தொடர்­பாக மேலும் சில இறக்­கு­ம­தி­யா­ளர்­க­ளுக்­கும் நோட்­டீஸ் அனுப்ப ஏற்­பா­டு­கள் நடை­பெற்று வரு­வதா­க­வும் ஜிஎஸ்டி நுண்­ண­றிவு இயக்­கு­ந­ர­கம் கூறி­ய­தாக ஊட­கச் செய்­தி­யில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே பொருள் சேவை வரி ஏய்ப்­பில் பல்­வேறு நிறு­வ­னங்­கள் ஈடு­பட்டு வரு­கின்­றன.

குறிப்­பாக கடந்த 2021-22 நிதி­யாண்­டில் மட்­டும் ஜிஎஸ்டி நுண்­ண­றிவு இயக்­கு­ந­ர­கம் வரி ஏய்ப்பு தொடர்­பாக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு ரூ.21,000 கோடியை மீட்­டுள்­ளது. எனி­னும் அவ்­வாண்டு ரூ.54 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு நடந்­துள்­ள­தாக அந்த இயக்­கு­ந­ர­கம் தெரி­வித்­தி­ருந்­தது.

கடந்த 2022-23ஆம் நிதி­யாண்­டில் 14,000 வரி ஏய்ப்­பு­கள் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளன. இந்த எண்­ணிக்கை 2021-22ஆம் நிதி­யாண்­டில் 12,574 ஆக­வும், 2020-21இல் 12,596 ஆக­வும் இருந்­தது.

இதற்­கி­டையே, நாடு முழு­வ­தும் ஜூலை 2017 முதல் பிப்­ர­வரி 2023 வரை மொத்­தம் ரூ.3.08 லட்­சம் கோடி அள­வுக்கு பொருள் சேவை வரி ஏய்ப்பு நடந்­துள்­ளது என்று நாடா­ளு­மன்ற மக்­க­ள­வை­யில் மத்­திய நிதி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இதில் ரூ.1.03 லட்­சம் கோடிக்கு மேல் மீட்­கப்­பட்­டுள்­ளது என்­றும் பிப்­ர­வரி 2023 வரை வரி ஏய்ப்பு செய்­த­தாக 1,402 பேரை அதி­கா­ரி­கள் கைது செய்­துள்­ள­னர் என்­றும் அந்த அமைச்சு மேலும் குறிப்­பிட்­டுள்­ளது.