தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகனை விடுவிக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட அதிகாரி மீது சிபிஐ வழக்கு

2 mins read
fedb0685-6cd2-44c9-b468-08a9df02036a
-

மும்பை: போதைப்­பொ­ருள் தொடர்­பான வழக்­கில் இருந்து இந்தி முன்­னணி நடி­கர் ஷாருக்­கான் மகன் ஆர்­யன்­கானை விடு­விக்க ரூ.25 கோடி லஞ்சம் கேட்ட அதி­காரி மீது சிபிஐ வழக்­குப்­ப­திவு செய்­துள்­ளது.

கடந்த 2021ஆம் ஆண்டு போதைப்­பொ­ருள் வழக்­கில் சிக்­கி­னார் ஆர்­யன்­கான்.

ஒரு சொகு­சுக் கப்­ப­லில் போதைப்­பொ­ரு­ளு­டன் கூடிய விருந்து நடை­பெற்­ற­போது, ஆர்­யன்­கா­னும் அங்­கி­ருந்­தார். இந்த விருந்து நிகழ்வு குறித்து தக­வ­ல­றிந்த மும்பை போதைப்­பொ­ருள் தடுப்­புப் படை­யி­னர் அதி­ர­டி­யாக அந்­தக் கப்­ப­லுக்­குள் நுழைந்து சோதனை நட­வ­டிக்கை மேற்­கொண்­ட­னர். அப்­போது போதைப்­பொ­ருள் பயன்­ப­டுத்­தி­யது தொடர்­பாக 25 வய­தான ஆர்­யன்­கான் கைது செய்­யப்­பட்­டார். இது இந்­தித் திரை­யு­ல­கில் பெரும் பர­பரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

எனி­னும் இந்த வழக்­கில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­ட­போது ஆர்­யன்­கான் மீது எந்­த­வி­த­மான குற்­றச்­சாட்­டும் இடம்­பெ­ற­வில்லை. இத­னால் சர்ச்சை வெடித்­தது.

போதைப்­பொ­ருள் வழக்­கில் இருந்து ஆர்­யன்­கானை விடு­விக்க சில தரப்­பி­னர் முயற்சி மேற்­கொண்­ட­தாக கூறப்­பட்­டது.

குறிப்­பாக ஐஆர்­எஸ். அதி­காரி சமீர்­வான்­கடே தலை­மை­யில் மும்பை போதைப்­பொ­ருள் தடுப்பு படை­யி­னர் நடத்­திய விசா­ர­ணை­யில் உள்ள பல குறை­பா­டு­களை, போதைப்­பொ­ருள் தடுப்பு படை­யின் சிறப்பு புல­னாய்­வுக் குழு கண்­டு­பி­டித்­தது. மேலும், ஆர்­யன்­கானை விடு­விக்க வேண்­டு­மா­னால் தமக்கு ரூ.25 கோடி லஞ்­சம் தர வேண்­டு­மென சமீர் வான்­கடே கோரி­ய­தும் அம்­ப­ல­மா­னது.

இது தொடர்­பாக சமீர் வான்­கடே உள்­ளிட்ட ஐந்து பேர் விசா­ரணை வளை­யத்­துக்­குள் கொண்டு வரப்­பட்­ட­து­டன், அவர்­கள் மீது சிபிஐ வழக்­கும் பதிவு செய்­தது. இந்த வழக்கு தொடர்­பாக மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்­பூர் என 29 இடங்­களில் சிபிஐ அதி­கா­ரி­கள் சோதனை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­ட­னர்.

கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்­பொ­ருள் தடுப்பு படை­யில் இருந்து சென்­னை­யில் வரி செலுத்­து­வோர் சேவை­கள் பிரி­வின் தலைமை இயக்­கு­ன­ராக மாற்­றப்­பட்­டுள்­ளார் சமீர்.