விமானப் பயணம்: தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகனுக்குக் குவியும் பாராட்டு

விமானப் பயணம்: தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகனுக்குக் குவியும் பாராட்டு

1 mins read
675d0f94-3848-4434-849a-c7ee5617209f
-

புது­டெல்லி: முதன் முறை­யாக தன் தந்­தையை விமா­னத்­தில் பய­ணம் மேற்­கொள்ள வைத்த மக­னுக்கு சமூக ஊட­கங்­களில் ஏரா­ள­மா­னோர் வாழ்த்து தெரி­வித்­துள்­ள­னர்.

டெல்­லி­யைச் சேர்ந்த ஜாடின் லம்பா என்ற இளை­ய­ரின் தந்­தைக்கு விமா­னத்­தில் செல்ல வேண்­டும் என்­பது நீண்­ட­நாள் ஆசை. இதை அறிந்­தி­ருந்த ஜாடின் தந்­தை­யின் விருப்­பத்தை நிறை­வேற்ற முடிவு செய்­தார்.

அண்­மை­யில் தன் தந்­தை­யு­டன் விமா­னத்­தில் பய­ணம் செய்த அவர், தனது தந்­தை­யின் மகிழ்ச்­சியை காணொ­ளி­யா­கப் பதிவு செய்து, சமூக ஊட­கத்­தில் பகிர்ந்­துள்­ளார். அதில் விமான நிலை­யத்­தில் காத்­தி­ருந்த போதும், விமா­னத்­தில் ஏறும்­போதும் தந்­தை­யின் முகத்­தில் காணப்­பட்ட உற்­சா­கத்தை ஜாடின் காட்­சிப்­ப­டுத்தியுள்­ளார். மேலும், விமா­னத்­தில் அமர்ந்­தி­ருக்­கும்­போது அவர் தந்­தை­யு­டன் எடுத்­துக்­கொண்ட செல்ஃபி பட­மும் சமூக ஊட­கப்­பக்­கத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

இதைக்­கண்டு நெகிழ்ந்­து­போன பல­ரும், "ஒரு மக­னாக தந்­தை­யின் மகிழ்ச்­சியை நீங்­கள் முழு­மை­யாக உணர்ந்­தீர்­கள் என்­ப­தைப் புரிந்­து­கொள்ள முடி­கிறது. உங்­க­ளுக்கு வாழ்த்­து­கள்," என்று குறிப்­பிட்­டுள்­ள­னர்.

நாள்­தோ­றும் ஏரா­ள­மா­னோர் இது­போன்று பல­ரது ஆசை­களை நிறை­வேற்றி வைக்­கின்­ற­னர். எனி­னும் ஜாடின் தந்­தை­யின் மகிழ்ச்­சித் தரு­ணங்­களை ஒரு நொடி கூட இழந்­து­வி­டா­மல் முழு­மை­யான பதிவு செய்­த­து­தான் அனை­வ­ரை­யும் கவர்ந்­துள்­ளது.