போக்குவரத்து விதிமீறல்: 4.12 லட்சம் பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல்: 4.12 லட்சம் பேர் மீது வழக்கு

1 mins read
77c88108-d0d7-4ebd-999b-ef6b0c71b671
-

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் அர­சி­யல் கட்­சி­யி­னர் போக்­கு­வ­ரத்து விதி­களை மீறி­யது தொடர்­பாக 4.12 லட்­சம் பேர் மீது வழக்­குப் பதி­வாகி உள்­ளது. மேலும், 22.75 கோடி ரூபாய் அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த வழக்­கு­கள் பெங்­க­ளூரு நக­ரில் மட்­டும் பதி­வா­ன­வை­யா­கும்.

கர்­நா­ட­கா­வில் அண்­மை­யில் தேர்­தல் நடந்து முடிந்­துள்­ளது. பல்­வேறு அர­சி­யல் கட்­சி­யி­ன­ரும் தீவிர தேர்­தல் பிர­சா­ரம் மேற்­கொண்­ட­னர். அப்­போது பெங்­க­ளூரு நக­ரில் பல்­வேறு போக்­கு­வரத்து விதி­மீ­றல்­கள் நடந்­தன.

அனு­ம­திக்­கப்­பட்ட எண்­ணிக்­கையை மீறி கார்­களில் சென்று பிர­சா­ரம் மேற்­கொண்­டது, தலைக்­க­வ­சம் அணி­யா­தது, கைப்­பே­சி­யில் பேசி­ய­ப­டி­ போக்­கு­வ­ரத்து சிக்­னல்­களில் நிற்­கா­ம­ல் சென்­றது ஆகி­யவை தொடர்­பில் வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன.

கடந்த ஏப்­ரல் 15ஆம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை கடந்த 25 நாட்­களில் மட்­டும் இவ்­வ­ளவு வழக்­கு­கள் பதி­வாகி உள்­ளன என்­றும் அவற்றை வசூ­லிப்­ப­தில் போக்­கு­வ­ரத்­துத்­துறை முனைப்பு காட்டி வரு­கிறது என்­றும் ஊட­கங்­கள் தெரி­வித்­துள்­ளன.