தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கேரளாவில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் சிக்கியது

1 mins read
100c4299-2e2c-491f-8c03-6f232de10cc5
படம்: ஊடகம் -

கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் இந்தியக் கடற்படையினருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய அதிரடிச் சோதனையில் ரூ.12,000 கோடி மதிப்புள்ள பொருள் சிக்கியது. இதுவரை கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களில் இதுவே ஆக அதிக மதிப்புடையது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தியா, மாலத்தீவு, இலங்கை ஆகிய நாடுகளுக்கு போதைப்பொருள்களைக் கடத்த கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்தனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானில் இருந்து கேரளாவுக்கு அந்தப் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. போதைப் பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்ட கப்பலில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் கைதுசெய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்