புதுடெல்லி: சிபிஐ (மத்திய புலனாய்வு அமைப்பு) புதிய இயக்குநராக கர்நாடக டிஜிபி பிரவீன் சூட் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய இயக்குநர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் பணிக்காலம் மே 25ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
கர்நாடகா மாநிலத்தில் பாஜக அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பணியில் பிரவீன் சூட் ஈடுபட்டு வருவதாக டிகே சிவகுமார் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில் கர்நாடக டிஜிபியாக இருந்த பிரவீன் சூட், மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ-யின் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

