என்ஐஏ அதிகாரிகள் சோதனை
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தெற்குக் காஷ்மீரின் புல்வாமா, சோபியான், பட்ஹம் ஆகிய மாவட்டங்களில் இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது.
பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டியது உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இந்தச் சோதனை நடைபெற்று வருவதாக என்ஐஏ தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஏவுகணை சோதனை வெற்றி
புதுடெல்லி: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஐஎன்எஸ் மார்முகவ் போர்க்கப்பலில் இருந்து பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை ஏவி சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாகச் சென்று தாக்கியதாக இந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடியுடன் வால்மார்ட் நிறுவன சிஇஓ சந்திப்பு
புதுடெல்லி: இந்தியாவுக்கு வந்துள்ள வால்மார்ட் நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி டக் மெக்மில்லன் தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "டக் மெக்மில்லனுடனான சந்திப்பு பலனளிக்கும் ஒன்றாக இருந்தது. வெவ்வேறு விஷயங்களில் நுண்ணறிவு கலந்த விவாதங்கள் நடத்தப்பட்டன. இந்தியாவில் ரூ.20,000 கோடி முதலீடு செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது," எனக் கூறியுள்ளார்.
71,000 பேருக்கு பணி நியமனக் கடிதம்
புதுடெல்லி: இந்தியாவில் 'ரோஜ்கர் மேளா' திட்டத்தின்கீழ் 71,000 பேருக்கு பணி நியமனக் கடிதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வழங்க உள்ளார். 45 இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் காணொளி மூலம் அவர் உரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

