புதுடெல்லி: அன்னையர் தினம் உலகெங்கும் கடந்த 14ஆம் தேதி ஞாயிறன்று கொண்டாடப்பட்டது.
இத்தினத்தன்று இண்டிகோ விமா னத்தில் எடுக்கப்பட்ட காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அதில், இண்டிகோ விமானத்தில் தான் பணிப்பெண்ணாகப் பணியாற்றுவதாக நபிரா சம்சி என்பவர் தன்னை அறிமுகம் செய்து பேச ஆரம்பிக்கிறார்.
அதன்பின், அதே விமானத்தில் பணிப்பெண்ணாகப் பணியாற்றும் தனது தாயார் ராம் சம்சியை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறி அவரை அழைக்கிறார்.
தொடர்ந்து, தனது அம்மா ராம் சம்சி கடந்த ஆறு ஆண்டு களாக விமானப் பணியாளர்களுள் ஒருவராக வேலை செய்வதை பார்த்து வருவதாகவும் அவர் தனக்கு ஊக்கம் அளிப்பதில் முன்மாதிரியாக விளங்கு வதாகவும் கூறுகிறார்.
தானும் ஒரு விமானப் பணிப்பெண்ணாக அவருக்கு முன்பாக நிற்பதில் பெருமைப்படுவதாகக் கூறி தன் அம்மாவுக்கு அன்போடு முத்தமிடுகிறார். அப்போது தாயாரின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வழிகிறது.
நபிரா அறிவிப்பை முடித்ததும் பயணிகள் இருவரையும் கைத்தட்டி பாராட்டுகின்றனர். இக் காணொளி அதிகமான பார்வை களைக் குவித்துவருகிறது.