தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கண்பார்வை இழந்த மாணவி பத்தாம் வகுப்புத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை

1 mins read
e8665052-2bcd-4136-aecd-d8e0a7f1ffaa
-

சண்­டி­கர்: அமில வீச்­சால் பாதிக்­கப்­பட்ட கஃபி என்ற 15 வயது மாணவி (படம்), தன் பார்­வையை இழந்த நிலை­யி­லும் சிபி­எஸ்இ பத்­தாம் வகுப்­புத் தேர்­வில் 95.2% மதிப்­பெண்­கள் பெற்று பள்­ளி­யில் முத­லி­டம் பிடித்து சாதனை புரிந்­துள்­ளார்.

சண்­டி­கர் நக­ரைச் சேர்ந்த வரான கஃபி, தனது மூன்று வய­தில் அமில வீச்­சு தாக்குதலுக்கு ஆளானார். இதனால், கஃபியின் முகம், கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு, பார்­வை­யும் பறி­போ­னது.

வீட்டில் வறுமை நிலை. தந்தை 'பியூன்' வேலை பார்த்துவந்தார். எனினும், வைராக்­கி­யத்­தைக் கைவி­டாத கஃபி, இன்று லட்­சக்கணக்கான சிறு­மி­கள், மாண­வி­கள், பெண்­களுக்கு ஒரு வழி­காட்­டி­யாக விளங்குகிறார்.

தனது தேர்ச்சி குறித்து கஃபி கூறுகையில், "பெற்­றோ­ரும் ஆசி­ரியர்­களும் நிறைய ஊக்­கம் அளித்­த­னர். ஐஏ­எஸ் அதி­கா­ரி­யாகி நாட்­டுக்­குச் சேவை­யாற்ற விரும்புகிறேன்.

"வறு­மை­யும் சவா­லும் என் மனக் கண்முன் நின்­ற­போ­தும் அதைப்பற்­றி எல்லாம் கொஞ்­ச­மும் கவ­லைப்­படா­மல் படிப்­பின்மீது மட்­டுமே கவ­னத்­தைச் செலுத்­தியதால் ­இந்தச் சாதனையைப் புரிய முடிந்தது," என்­கி­றார் கஃபி நம்­பிக்­கை­யுடன்.

இவர் தனது எட்டு வயது முதலே ஹிசார், சண்­டி­க­ரில் உள்ள பார்­வை­யற்­றோர் பள்ளி களில் பயின்று வந்துள்ளார்.