பாகிஸ்தான் சிறையில் இருந்த 184 மீனவர்கள் குஜராத் திரும்பினர்

பாகிஸ்தான் சிறையில் இருந்த 184 மீனவர்கள் குஜராத் திரும்பினர்

1 mins read
2b7f87d3-c1cb-440d-80f7-df5538e50b44
-

அக­ம­தா­பாத்: பாகிஸ்­தான் சிறை­யில் அடைக்கப்பட்டிருந்த 198 இந்­திய மீன­வர்­கள் விடுவிக்கப் பட்டனர். அவர்களில் குஜராத்தைச் சேர்ந்­த­ 184 பேர் தங்­கள் சொந்த ஊர் வந்­த­டைந்­த­னர். மூவர் ஆந்­தி­ரப்பிரதேசம், நால்­வர் டையூ­ நகர், ஐவர் மகா­ராஷ்ட்­ரா­, இருவர் உ.பி.யைச் சேர்ந்­த­வர்­கள்.

இவர்­கள் அனை­வ­ரும் பஞ்சா பின் வாகா எல்­லை­யில் உள்ள இந்­திய அதி­கா­ரி­கள் வசம் ஒப்­படைக்­கப்பட்­ட­ நிலையில், அவரவரின் சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்பட்­ட­னர்.

அர­பிக்­க­ட­லில் குஜ­ராத்தை ஒட்­டிய கட­லோ­ரப் பகு­தி­களில் மீன்­பி­டித்­துக்­கொண்­டி­ருந்த இந்­திய மீன­வர்­க­ளை எல்­லை­யைத் தாண்டி மீன்­பி­டித்­த­தா­கக் கூறி பாகிஸ்­தான் கட­லோ­ரக் காவல் படை­யி­னர் கைது செய்து அந்­நாட்­டுச் சிறை­யில் அடைத்தனர்.

இதுபோல் சிறையில் அடைக்கப்பட்டு ஏறக்­கு­றைய 4 ஆண்­டு­கள் ஆன நிலை­யில், அவர்­களை விடு­விக்க மத்­திய அரசு தூத­ரக ரீதி­யில் நடவடிக்­கை­களை எடுத்­தது.

இதை­ய­டுத்து, பாகிஸ்­தான் சிறை­யில் உள்ள 198 இந்­திய மீன­வர்­கள் கடந்த 13ஆம் தேதி அன்று விடு­விக்­கப்­பட்­ட­னர்.

ரயில் மூலம் குஜ­ராத்­தைச் சேர்ந்த 184 மீன­வர்­கள் வதோ­தரா ரயில் நிலை­யத்துக்கு நேற்று வந்து சேர்ந்தனர். அவர்களை மாநில மீன்­வ­ளத் துறை அமைச்­சர் ராகவ்ஜி படேல் உள்­ளிட்­டோர் வர­வேற்­று, நான்கு பேருந்­து­கள் மூல­மாக சொந்த ஊர்­க­ளுக்கு அனுப்­பி­வைத்தனர்.