கோல்கத்தா: அவசர சிகிச்சை வாகனத்தைப் பயன்படுத்து வதற்குப் போதிய பணம் இல்லாத காரணத்தால், மேற்கு வங்கத்தில் ஐந்து மாதக் குழந்தையின் சடலத்ைத 200 கி.மீ. தூரம் வரை பேருந்திலேயே எடுத்துக்கொண்டு வந்த அவலம் நடந்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம், உள்ள கலியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அஷிம் தேப்சர்மா. இவரது 5 மாதக் குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, சிலிகுரி பகுதியில் உள்ள நார்த் பெங்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தையைச் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளார். ஆறு நாள்கள் ஆன பின்னரும் குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் மருத்துவமனையிலேயே உயிரிழந்தது.
மருத்துவமனைக்கும் அஷிம் வீடு இருக்கும் பகுதிக்கும் சுமார் 200 கி.மீ. தூரம் என்பதால், குழந்தையின் உடலை எடுத்துச் செல்ல அவசர சிகிச்சை வாக னத்தை அணுகியுள்ளார்.
ஆறு நாள் சிகிச்சையில் அஷிம் ரூ.16,000 செலவு செய்த நிலையில், அவரிடம் வேறு பணம் இல்லை. அவசர சிகிச்சை வாகன ஓட்டுநர்கள் ரூ.8,000 கொடுத்தால்தான் வரமுடியும் என்று கறாராகக் கூறியுள்ளனர். எனவே, குழந்தையின் உடலை ஒரு பையில் வைத்து மறைத்து 200 கி.மீ. தூரம் பேருந்திலேயே அஷிம் கொண்டு வந்துள்ளார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் சமூக ஊடகங்களில் பரவியது.

