பதவி கேட்டு மிரட்டமாட்டேன்

பதவி கேட்டு மிரட்டமாட்டேன்

2 mins read
3630e67d-3bcf-4a0b-be4a-d5e68c097e4a
-

கர்நாடகாவில் டி.கே.சிவகுமார் பரபரப்புப் பேட்டி

புது­டெல்லி: கர்­நா­டகா சட்­ட­மன்­றத் தேர்­த­லில் அமோக வெற்றி பெற்றது காங்­கி­ரஸ். இருந்தும் யார் முதல்­வர் நாற்­கா­லி­யில் உட்­கா­ரப்­போ­கி­றார்­ என்­பது இன்­ன­மும் குழப்­ப­மா­கவே உள்­ளது.

காங்­கி­ரஸ் தலை­வர்­கள் மல்­லி­கார்­ஜுன் கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணு­கோ­பால் ஆகி­யோர், நேற்று இரவு கர்­நா­டக காங்­கி­ரஸ் கட்­சித் தலை­வர் டிகே சிவ­கு­மார், முன்­னாள் முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மையா ஆகி­யோ­ரு­டன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னர். நேற்றிரவு நிலவரப்படி, எப்­ப­டி­யும் 24 மணி நேரத்­தில் கர்­நா­டக முதல்­வர் யார் என்ற அறி­விப்பு வந்­து­வி­டும் என்று கூறப்பட்டது.

இந்­நி­லை­யில், டிகே சிவ­கு­மார், "நான் முதல் அமைச்­சர் பதவி கேட்டு யாரை­யும் மிரட்டமாட்­டேன். யாரை­யும் பிரிக்க விரும்­ப­வில்லை. யார் முது­கி­லும் குத்த மாட்­டேன். வர­லாற்­றில் தவ­றான இடத்­தைப் பிடிக்க நான் விரும்­ப­வில்லை. எங்­க­ளது அடுத்த சவால் மக்­க­ள­வைத் தேர்­த­லில் 20 தொகு­தி­களில் வெற்றி பெறு­வ­து­தான். காங்­கி­ரஸ் கட்சி என்­னு­டை­யது," என்று கூறி­யுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் டெல்­லி­யில் இருந்து கட்­சித் தலைமை அழைப்பு விடுத்­தும்­கூட, தனக்கு வயிற்­றுக்­கோ­ளாறு என்று கூறி, டெல்லி செல்­வ­தைத் தவிர்த்­து­விட்­டார். பின்­னர் நேற்று பிற்­ப­கல் டெல்­லிக்­குச் சென்­ற­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

முன்­னாள் முதல்­வர் சித்­த­ரா­மையாவோ, நேற்று முன்­தி­னமே டெல்­லிக்­குச் சென்­று­விட்­டார். அங்­குள்ள காங்­கி­ரஸ் கட்­சி­யின் மூத்த தலை­வர்­க­ளி­டம் ஆலோ­சனை நடத்­தி­னார். அவ­ரையே முதல்­வ­ராக, தலைமை அறி­விக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இருப்­பி­னும் அவர், செய்­தி­யா­ளர் சந்­திப்­புக் கூட்­டத்­தில், "பொறுத்­தி­ருந்து பார்ப்­போம். யார் முதல்­வர் என்று எனக்­குத் தெரி­யாது. அது­கு­றித்த அறி­விப்பை கட்­சித் தலைமை வெளி­யி­டும். அப்­போது தெரிந்­து­கொள்­ள­லாம்," என்று கூறி­யுள்­ளார்.

முதல்­வரை அறி­விப்­ப­தில் சுணக்­கம் ஏற்­பட்­டுள்ள இந்த நிலை, வரும் நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் காங்கிரஸ் கட்­சி­க்கு பாதகமாக இருக்கும் என்று கூறப்­ப­டு­கிறது.

டிகே சிவ­கு­மா­ருக்கு ஒக்­க­லிக்­கர் சமூ­கத்­தி­ன­ரி­டம் பெரிய ஆத­ரவு இருக்­கிறது. அந்த சமூ­கத்­தி­னர் சிவ­கு­மாரே முதல்­வ­ராக வர­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். ஒக்­க­லி­க்கர் சங்­கம், டி.கே.சிவகு­மா­ருக்கு முத­ல­மைச்­சர் பதவி வழங்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி வரு­கிறது. அந்த சமூக மடா­தி­ப­தி­கள் நிர்­ம­லா­னந்­த­நாத சுவாமி, நஞ்­சா­வ­தூத சுவாமி மற்­றும் லிங்­கா­யத் மடா­தி­ப­தி­கள் என 20 மடா­தி­ப­தி­கள் பகி­ரங்­க­மா­கவே டி.கே.சிவகுமா­ருக்கு முதல் அமைச்­சர் பதவி வழங்க வேண்­டும் என்று காங்­கி­ரஸ் மேலி­டத்­திற்கு கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

சித்­த­ரா­மை­யா­வுக்கோ, பெரிய அள­வி­லான சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோ­ரின் ஆத­ர­வும் இருக்­கிறது. அத­னால் சித்­த­ரா­மையா முத­ல­மைச்­ச­ராக அறி­விக்­கப்­ப­டு­வார் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கட்­சித்­த­லைமை இரு­வ­ரி­ட­மும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­பின் எப்­ப­டி­யும் விரைவில் முதல்­வர் யார் என்­பதை அறி­வித்­து­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்த நிலை­யில், முதலமைச்சர் பத­வியை முன்­னாள் துணை முதலமைச்சர் பர­மேஷ்­வ­ருக்குத் தரவேண்­டும் என வலி­யு­றுத்தி அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் நேற்று ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்டு உள்­ள­னர். இத­னால், முதல்வர் பதவிக்கு மும்­முனை போட்டி ஏற்­பட்டு உள்­ளது. முதலமைச்சர் பத­விக்கு இரு­வர் இடையே போட்­டிக்­கான சூழல் காணப்­ப­டும்­போது, இப்போது அதில் பர­மேஷ்­வ­ரும் இணைந்து உள்­ளார். எனி­னும், கட்சி மேலி­டம் என்ன முடிவு செய்­கி­றதோ அதற்­கேற்­பவே, இதில் தீர்வு காணப்­படும் என கூறப்­ப­டு­கிறது.