சந்­தி­ர­பாபு நாயு­டுவின்­ வீட்டைக் கையகப்படுத்த நடவடிக்கை

சந்­தி­ர­பாபு நாயு­டுவின்­ வீட்டைக் கையகப்படுத்த நடவடிக்கை

1 mins read
6cfc4be7-1a55-4d6b-b1c1-cb33c1d28ead
-

குண்­டூர்: தெலுங்கு தேசம் கட்சி­யின் தலை­வ­ரும் முன்­னாள் ஆந்­திர முதல்­வ­ரு­மான சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் (படம்) வீட்டை கையகப்படுத்த ஆந்­திர உள்­துறை அமைச்­ச­கம், சிஐடி-க்கு அனு­மதி வழங்கி உள்­ளது.

குண்­டூர் மாவட்­டம், உண்­ட­வல்லி அருகே உள்ள கர­கட்டா தெரு­வில் லிங்­க­ம­னேனி ரமேஷ் என்­ப­வ­ரின் வீட்­டில் தெலுங்கு தேசம் கட்­சித் தலை­வர் சந்­தி­ர­பாபு நாயுடு வாட­கைக்கு குடி இருந்­தார். பின்­னர் அந்த வீட்டை அவர் வாங்­கி­னார்.

இது­தொ­டர்­பாக மங்­க­ள­கிரி ஒய்.எஸ்.ஆர். காங்­கி­ரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஆள்ள ராம­கி­ருஷ்ணா ரெட்டி, கடந்த ஆண்டு ஆந்­திர மாநில சிஐடி காவல்துறையிடம் புகார் அளித்­தார். அந்த புகா­ரில், ''ஆந்­திர மாநிலத் தலை­ந­கர வீட்டு வசதி திட்ட வாரி­யம் உள்­ளிட்ட வளர்ச்சித் திட்­டங்­க­ளின் மூலம் லிங்­க­ம­னேனி ரமே­ஷின் சொத்­து­கள் மதிப்பு உயர அப்­போ­தைய முதல்­வர் சந்­தி­ர­பாபு நாயுடு உதவி செய்­தார்,'' என்று குற்­றம் சாட்­டி­யி­ருந்­தார்.

அதற்கு பிர­தி­ப­ல­னாக லிங்­க­ம­னேனி ரமேஷ் தனது வீட்டை சந்­தி­ர­பாபு நாயு­டு­வுக்கு இல­வ­ச­மாக வழங்கி உள்­ளார் என்று ஒய்­எஸ்­ஆர் காங்­கி­ரஸ் கட்­சி­யினர் குற்­றம் சாட்டி வரு­கின்­ற­னர். இந்த விவ­கா­ரம் தொடர்­பாக சிஐடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் உண்­ட­வல்­லி­யில் உள்ள சந்­தி­ர­பாபு நாயு­டு­வின் வீட்டை கையகப்படுத்த ஆந்­திர உள்­துறை அமைச்­ச­கம் சிஐடி-க்கு அனு­மதி வழங்கி உள்­ளது.

இந்த நடவடிக்கையைக் கண்டித்து ஆந்­திர அர­சுக்கு தெலுங்கு தேசம் கட்­சி­யி­னர் கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ள­னர்.