புதுடெல்லி: இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குச் செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா ஏஐ-302 என்ற விமானம் நடுவானில் குலுங்கியது.
அதனால் ஏழு பயணிகள் காயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
விமானத்தில் இருந்த மருத்துவரும் தாதியும் அவர்களுக்கு முதலுதவி அளித்தனர்.
விமானம் சிட்னியில் பத்திரமாகத் தரையிறங்கியது. அங்கு மருத்துவ உதவி தேவைப்பட்டவருக்கு மேலும் உதவி வழங்கப்பட்டது. யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

