உடற்பருமன்: காவலர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து

உடற்பருமன்: காவலர்களுக்கு வேலை பறிபோகும் ஆபத்து

1 mins read
5c3a8fd9-38da-4fd7-b863-c555195e39be
-

கௌகாத்தி: இந்­தி­யா­வின் அசாம் மாநில நிர்­வா­கம், குடிப்பழக்­கம் உள்ள, உடற்பரு­மன்­மிக்க காவல்­துறை அதி­காரி­களை வீட்­டுக்கு அனுப்ப நட­வ­டிக்கை எடுக்கிறது.

காவல்­து­றை­யில் பரு­ம­னாக இருப்­போ­ருக்கு விருப்ப ஓய்வு அளிக்­கப்­படும் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார்.

பணி­பு­ரி­வ­தற்குத் தகுதியற்ற 650 அதி­கா­ரி­க­ளுக்கு விருப்ப ஓய்வு அளிக்­கப்­படும் என அசாம் காவல்­துறைத் தலை­வர் ஜி.பி.சிங் கூறினார்.

உடற்­த­கு­தி­பெற காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்கு மூன்று மாத அவ­கா­சம் வழங்­கப்­படும். அதன்­பி­றகு, அவர்­க­ளின் 'பிஎம்ஐ' குறி­யீடு பதி­வு­செய்­யப்­படும், தகு­தி­ இல்­லா­த­வர்­கள் விருப்ப ஓய்­வில் வீட்­டுக்கு அனுப்­பப்­படு­வர். இதே கதி­தான் குடி­கார அதி­கா­ரி­களுக்­கும் என்று நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.