தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளி ராணாவை நாடுகடத்த அமெரிக்கா ஒப்புதல்

1 mins read
7c824e6e-0f30-49ee-802d-22117ec80853
-
multi-img1 of 2

வாஷிங்­டன்: மும்பை பயங்­கர வாதத் தாக்­கு­தல் சம்­ப­வம் தொடர்­பாக அமெ­ரிக்­கா­வில் கைதான பயங்­க­ர­வா­தி­யான தஹா­வூர் ராணாவை இந்­தியா வுக்கு நாடு­க­டத்த அமெ­ரிக்க நீதி­மன்­றம் ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது. இது இந்­தி­யா­வுக்கு கிடைத்த வெற்­றி­யா­கப் பார்க்­கப்­ப­டு­கிறது.

கடந்த 2008ல் பாகிஸ்­தா­னில் செயல்­பட்டு வரும் லஷ்­கர்-இ-தொய்பா அமைப்­பைச் சேர்ந்த பயங்­க­ர­வா­தி­கள் மகா­ராஷ்­டிரா மாநி­லம், மும்­பைக்­குள் கடல்­வ­ழி­யாக நுழைந்து தாக்­கு­தல் நடத்­தி­னர்.

உல­கையே உலுக்­கிய இந்­த சம்பவத்தில் 166 அப்­பாவி மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர். இதில் ஆறு அமெ­ரிக்­கர்­களும் அடங்­கு­வர். அத்­து­டன், 300க்கும் மேற்பட்­ட­வர்­கள் படு­கா­யம் அடைந்தனர்.

தாக்­கு­த­லில் முக்­கிய குற்­ற­வா­ளி­யான டேவிட் ஹெட்லி அமெ­ரிக்­கா­வில் கைது செய்­யப்­பட்டு 35 ஆண்­டு­கள் சிறைத் தண்­டனை அனு­ப­வித்து வரு­கி­றார். இவ­ரது நண்­ப­ரும் தாக்­கு­தல் திட்­டத்­திற்கு உதவியவ­ரு­மான கன­டா­வில் வசித்த பாகிஸ்­தான் வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்த தொழி­ல­தி­பர் தஹா­வூர் ராணா கடந்த 2020ல் அமெ­ரிக்­கா­வில் கைது செய்­யப்­பட்­டார்.

இந்­நி­லை­யில், இந்­தச் சம்­ப­வத்­தில் தொடர்­பு­டைய குற்­ற­வா­ளி­யான தஹா­வூர் ராணாவை இந்­தி­யா­வுக்கு நாடு­க­டத்த அமெ­ரிக்­கா­வின் லாஸ் ஏஞ்­சல்­ஸில் உள்ள அமெ­ரிக்க மாவட்ட நீதி­மன்­றம் சம்­ம­தம் தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து நீதி­பதி ஜாக்­கு­லின் சூல்­ஜி­யான் கூறு­கை­யில், "62 வய­தான ராணாவை நாடு கடத்த இந்­தியா கோரி­யுள்ள கார­ணங்­களில் முகாந்­த­ரம் உள்­ள­தால் அவரை நாடு­க­டத்த சம்­ம­திக்­கி­றோம்," என்­றார். மே 16ஆம் தேதி இதற்­கான உத்­த­ரவை நீதி­மன்­றம் பிறப்­பித்தது.