பெங்களூரு: கர்நாடக முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் இந்த அளவுக்கு தாமதம் காட்டியது காங்கிரஸ் கட்சியினரிடையே ஒற்றுமை உணர்வு இல்லாத நிலையைக் காட்டுவதாக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வரு மான பசவராஜ் பொம்மை விமர் சித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டப்பேரவைத் தேர்த லில் 135 இடங்களில் அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருந்தது.
இந்த வெற்றிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவும் மாநில காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாரும் கடுமையாகப் பாடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் ஒருவர் மட்டுமே முதல்வர் பதவியை வகிக்கமுடியும் என்பதால், அந்தப் பதவியை யாருக்கு வழங்குவது என்பதில் கடந்த ஆறு நாள்களாக இழுபறி சூழல் நிலவி வந்தது.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பசவராஜ் பொம்மை பேசியபோது, "நல்ல வெற்றி கிடைத்தும் முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் திணறுவது சரியல்ல. காங்கிரஸ் கட்சி அரசியல் செய்வதை நிறுத்திவிட்டு, ஆட்சி அமைத்து மக்களுக்குச் சேவை செய்யவேண்டும்," எனத் தெரிவித்தார்.
இதனிடையே, கர்நாடகத்தின் புதிய முதல்வராக சித்தராமை யாவும் துணை முதல்வராக டி கே சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், நேற்று இரவு காங்கிரஸ் எம்எஎல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
நாளை 20ஆம் தேதி பதவி ஏற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்தவும் காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.
சித்தராமையாவின் ஆதரவாளர்கள் ஆங்காங்கே அவருக்கு பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியை ெவளிப்படுத்தினர். சிவகுமாரின் சொந்த ஊரான ராமநகராவில் காவலர்கள் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
"கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலமும் மக்களின் நலனும் மட்டுமே எங்களின் முக்கிய நோக்கம்," என டி.கே.சிவகுமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக டி கே சிவ குமாரின் சகோதரர் டி கே சுரேஷ் கூறுகையில், "எனது சகோதரர் முதலமைச்சராக விரும்பினார். ஆனால், அப்படி ஆகவில்லை. கட்சியின் நலன் கருதி முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. ஐந்து ஆண்டுகளை இரண்டாகப் பிரித்து ஆட்சி செய்யும் ஒப்பந்தத்தை முன்மொழிந்ததாக கேள்விப்படுகிறேன்," என்று கூறியுள்ளார்.
இதனிடையே, சோனியா காந்தி இவ்விவகாரத்தில் தலை யிட்டதை தொடர்ந்தே டி கே சிவகுமார் சமாதானம் ஆனதாகவும் துணை முதல்வராக இருக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிவகுமாரை சமாதானப்படுத்தும் வகையில் அவருக்கு ஆறு துறைகளை வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

