புதுவை: புதுவை மாநிலம், லாசுப்பேட்டையில் தேநீர்க் கடை நடத்தி வருகிறார் ரவிச்சந்திரன்.
நாள்தோறும் இக்கடைக்கு மட்டும் வருகை தரும் ஒரு காகத்துக்கு, அவர் பால் ஆடை வழங்குகிறார்.
அதை மட்டுமே சாப்பிடும் அந்தக் காகம், கடையில் உள்ள எந்தத் தின்பண்டத்தையும் தொடுவதில்லை. கடைக்கு வந்த அடுத்த நொடியே ரவிச்சந்திரனைக் கூப்பிடும் விதமாக 'கா..கா' என கரையும் காகத்துக்கு தயாராக உள்ள பால் ஆடை ஒரு குவளையில் வைக்கிறார் ரவிச்சந்திரன்.

