மும்பை: இந்தி நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் மீதான போதைப் பொருள் வழக்கை தொடக்கத்தில் விசாரித்த மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே தாம் சாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
ஆர்யன்கானை விடுவிக்க சமீர் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாக சிபிஐ சாடியுள்ளது.
இந்நிலையில், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் இணை இயக்குநர் தம்மை துன்புறுத்தியதாக விசாரணையின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.