எட்டு புதிய நகரங்கள்: மத்திய அரசு திட்டம்

எட்டு புதிய நகரங்கள்: மத்திய அரசு திட்டம்

1 mins read
61fc5422-bd7d-40bd-b18b-294aaa210caa
-

புது­டெல்லி: நாட்­டின் பல்­வேறு பகு­தி­களில் எட்டு புதிய நக­ரங்­கள் உரு­வாக்­கப்­படும் என மத்­திய வீட்டு வசதி, நகர்ப்­புற மேம்­பாட்டுத் துறைக்­கான ஜி20 பிரி­வின் இயக்­கு­நர் எம்.பி.சிங் தெரி­வித்­துள்­ளார்.

இது­தொ­டர்­பாக மாநில அர­சு­கள் 26 புதிய நக­ரங்­கள் குறித்த முன்­மொ­ழி­வு­களை அனுப்பி உள்­ள­தா­க­வும் அவை ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­க­வும் போபா­லில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் அவர் தெரி­வித்­தார்.

"அந்­தப் பட்­டி­ய­லில் இருந்து எட்டு நக­ரங்­க­ளைத் தேர்வு செய்து முழு­மை­ய­மாக மேம்­ப­டுத்­து­வது குறித்து பரி­சீ­லிக்­கப்­படும்.

"இந்­தப் புதிய நக­ரங்­க­ளுக்­கான இடங்­கள், அவற்றை உரு­வாக்­கு­வ­தற்­கான கால அள­வு­களை மத்­திய அரசு மிக விரை­வில் அறி­விக்­கும்," என்­றார் எம்.பி.சிங்.