ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

1 mins read
27e60308-6ac2-4b8b-a5c7-8b433866c6b9
-

புதுடெல்லி: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லி அரசுக்கும் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கும் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது.

இதற்குத் தீர்வு காணும் வகையில் டெல்லி அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதிகாரிகளை நியமிக்கவும் இடமாற்றம் செய்யவும் மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் டெல்லி அரசுக்கு அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு அனுமதி அளிப்பதில்லை என்று ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடுத்தது. உயர் அதிகாரி கள் பணி நியமனம், பணியிட மாற்றத்துக்குப் புதிய ஆணை யம் அமைக்க மத்திய அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது.