அமர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டம் உதார் தானிவால் எல்லைப் பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய வான்வெளியில் பாகிஸ்தானில் இருந்து அத்துமீறி நுழைந்து சந்தேகத்திற்கு இடமாகப் பறந்த ஆளில்லா வானூர்திகளை அவர்கள் சுட்டுவீழ்த்தினர்.
இதே மாவட்டத்தில் ரத்தன் குராட் பகுதியில் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் நுழைந்த மற்றொரு பாகிஸ்தானிய ஆளில்லா வானூர்தியையும் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். கறுப்பு நிறத்திலான அந்த இரண்டு ஆளில்லா வானூர்திகளையும் சோதனை செய்தபோது அவற்றில் இரண்டு பொட்டலங்கள் இருந்ததாகவும் அவற்றில் 2.6 கிலோ கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் இருந்ததாகவும் தெரியவந்தது.
பொட்டலங்களில் இருந்த போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

