திருவனந்தபுரம்: இந்தியத் துணை அதிபர் ஜெகதீப் தன்கர் கேரளாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். இன்று அவர் கேரளத் தலைநகர் திருவனந்தபுரம் வந்தடைகிறார்.
பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
நாளை திருவனந்தபுரம் சட்டமன்றக் கட்டடத்தின் வெள்ளிவிழாவில் கலந்துகொண்டு நினைவுச்சின்னம் ஒன்றைத் திறந்து வைக்கிறார்.

