திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 35,000 லட்டுகளைத் திருடி கூடுதல் விலைக்கு விற்பனை செய்த அக்கோயில் ஊழியர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஐவரும் லட்டுகள் தயாரிக்கும் இடத்தில் இருந்து அவற்றை விற்பனை செய்யும் இடத்துக்குக் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் என்று ஆந்திரா காவல்துறை தெரிவித்துள்ளது.
திருட்டு குறித்து தகவல் கிடைத்ததை அடுத்து திருடர்கள் சிக்கினர்.