முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல், கார்கே அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல், கார்கே அஞ்சலி

1 mins read
f3c839eb-9d17-486d-96bf-3cf48370fb54
-

புது­டெல்லி: மறைந்த முன்­னாள் பிர­த­மர் ராஜீவ் காந்­தி­யின் 32வது நினைவு நாள் நேற்று அனு­ச­ரிக்­கப்­பட்­டது. இதை­யொட்டி, டெல்­லி­யில் உள்ள ராஜீவ் காந்தி நினை­வி­டத்­தில் முன்­னாள் காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி, பிரி­யங்கா காந்தி ஆகி­யோர் மலர் தூவி அஞ்­சலி செலுத்­தி­னர்.

தனது தந்­தைக்கு உணர்­வு­பூர்­வ­மாக அஞ்­சலி செலுத்­திய ராகுல் காந்தி, "அப்பா, நீங்­கள் எப்­போ­தும் ஒரு ஊக்கசக்­தி­யாக, என் நினை­வு­களில் நிறைந்­தி­ருக்­கி­றீர்­கள்!" என ராஜீவ் காந்­தி­யின் காணொ­ளி­யைப் பகிர்ந்­து­, இந்தியில் டுவிட் செய்­தார்.

முன்­ன­தாக, ராஜீவ் காந்­தி­நினை­வி­டத்­தில் காங்­கி­ரஸ் கட்­சி­ யின் முன்­னாள் தலை­வரும் மனைவியுமான சோனியா காந்தி, அக்­கட்­சி­யின் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே ஆகி­யோ­ரும் அஞ்­சலி செலுத்­தி­னர்.

1984ஆம் ஆண்டு தனது தாயா­ரும் அப்­போ­தைய பிர­த­ம­ரு­மான இந்­திரா காந்­தி­யின் படு­கொ­லை­யைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி காங்­கி­ர­சின் பொறுப்பை ஏற்­றார். அக்­டோ­பர் 1984ல் அவர் பத­வி­யேற்­ற­போது 40 வய­தில் இந்­தி­யா­வின் இளைய பிர­த­ம­ரா­னார். 1944ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி, 1991 மே 21ஆம் தேதி தேர்­தல் பிர­சா­ரத்­துக்­காக தமி­ழ­கத்­தின் திருப்பெ­ரும்­பு­தூர் வந்த போது தற்­கொ­லைப் படை தாக்கு­த­லில் கொல்­லப்­பட்­டார்.