பிலாஸ்பூர்: இமாச்சலப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பாகீரத் சர்மா, 74. விவசாயியான இவர், தனது மூன்று ஏக்கர் விவசாய நிலத்தை அரசு அலுவலகம் கட்டுவதற்கு தானமாகக் கொடுத்து மக்கள் பலரது பாராட்டையும் பெற்று வருகிறார்.
இந்த நிலத்தின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்குள்ள பிலாஸ்பூர் மாவட்டம், கார்சி சவுக் பகுதி யில் வசித்து வருகிறார் பாகீரத் சர்மா. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இவரது நான்கு மகள் களுக்குத் திருமணமாகி விட்டது. மகன்களில் ஒருவர் பெட்ரோல் நிலையத்திலும் மற்றொருவர் டாக்சி ஓட்டு நராகவும் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில், கார்சி சவுக் பகுதியில் வருவாய்த் துறைக்கு தேவைப்பட்ட 3 ஏக்கர் நிலத்தை தானமாகக் கொடுத்துள்ளார் விவசாயி பாகீரத் சர்மா. அந்த அலுவலகத்தின் மூலம் 12 கிராமங்களைச் சேர்ந்த 4,000 பேர் பயனடைவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலத் தகராறால் உறவுகள் முறியும் இந்தக் கால கட்டத்தில், பாகீரத் சர்மா ஒரு முன்மாதிரி யாக விளங்குவதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஆத்மதேவ் சர்மா பாராட்டி உள்ளார்.

