புதுடெல்லி: இந்தியாவில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டிருந்தது. அதில், ஏறக்குறைய 3 லட்சம் கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். மீதமுள்ள 4 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் எங்கே மறைந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தப் பணம் யார் மூலம் பதுக்கப்பட்டுள்ளது என்று அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம் மேளனம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு ரிசர்வ் வங்கியும், மத் திய அரசும் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனப் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக கடந்த வெள்ளிக் கிழமை இரவு அறிவித்தது.
புதிய 2000 ரூபாய் நோட்டு களை வைத்துள்ளவர்கள் செப் டம்பர் 30ஆம் தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் எனவும் அது கூறியிருந்தது. இந்த அறிவிப்பு பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து 4 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் மறைந்தது எப்படி என குற்றச்சாட்டும் வித மாக வினா எழுப்பியுள்ளன.
முன்னாள் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்: ரூ.2000 நோட்டுகளை திரும்பப் பெறுதல் என்பது கோடிக்கணக்கான மக்களை ஏமாற்றும் செயல்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்: முதலில் ரூ.2000 நோட்டுகளைக் கொண்டு வரும்போது ஊழலைத் தடுக்கும் என்றனர். இப்போது ஊழல் முடிவுக்கு வரும் என்கின்றனர். ஏற்கமுடியாத செயல்.
முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு: ரிசர்வ் வங்கி ரூ.2000 நோட்டுகளைத் திரும் பப்பெறும் அறிவிப்பை வரவேற்கிறேன். ஊழல் குறையும்.

