ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், கிருஷ்ணபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுஜான்யா என்ற சிறுமியின் கண்ணிலிருந்து கடந்த சில நாட்களாக அரிசி, தாள், நெகிழித் துணுக்கு, இரும்புத் துகள் உள்ளிட்ட பொருள்கள் வெளிவருகின்றன.
இதற்கு என்ன காரணம்? ஏன் இப்படி வருகிறது என சிறுமியின் பெற்றோரும் மருத்துவர்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.
இதையடுத்து, ஒன்றாம் வகுப்பில் படித்து வரும் சிறுமி சுஜன்யாவைக் கூலி வேலை செய்து வரும் அவரது பெற்றோர் கம்மம் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் சுஜான்யாவைச் சோதித்து வருகின்றனர்.
சுஜன்யாவின் ஒரு கண்ணிலிருந்து மட்டும் கடந்த சில நாள் களாக தினமும் அரிசி, பிளாஸ்டிக் துண்டுகள், பேப்பர், இரும்புத் துகள்கள் வெளிவருவதால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்று பெற்றோர் கூறியுள்ளனர்.

