செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
be9d963d-b623-48f1-bd0d-d981560d00d5
-

பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய ஆடைக் கட்டுப்பாடு

திஸ்பூர்: பள்ளி ஆசியர்கள் ஒரு சில ஆடைகளைத்தான் அணியவேண்டும் என ஆடைக் கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது அசாம் மாநில அரசு. குறிப்பாக, ஆசிரியர், ஆசிரியைகள் கண்ணியமாக தூய்மையான, மென்மை நிறம் கொண்ட உடைகளை அணியவேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

ஜீன்ஸ், லெக்கிங்ஸ், டீசர்ட் உள்ளிட்ட ஆடைகளை அணிந்து வருவதற்கு முற்றிலும் தடை விதித்து, ஆசிரியர்கள் சட்டை, பேண்ட் ஆடையையும் ஆசிரியைகள் சேலை, சுடிதார் மட்டும் அணிந்து வரவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நெற்றியில் கணவர் பெயரில் 'பச்சை'

கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவரது பெயரை நெற்றியில் 'பச்சை' குத்திக்கொண்டுள்ளார். பெண்ணின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவரது கணவர் பெயர் சதீஷ் என்பது காணொளி மூலம் தெரியவந்துள்ளது. இந்தப் புகைப்படமும் காணொளியும் சமூக ஊடகங்களில் பரவுகின்றன. படம்: இந்திய ஊடகம்

500 சுற்றுலாப் பயணிகள் மீட்பு

சிக்கிம்: சிக்கிம் மாநிலத்தில் கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர். இங்குள்ள லாச்சென், லாச்சுங், சுங்தாங் உள்ளிட்ட பள்ளத்தாக்குப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டு சுற்றிப் பார்க்கச் சென்ற 500 பேர் வௌியேற முடியாமல் சிக்கித் தவித்த நிலையில், இந்திய ராணுவத்தினர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர். 216 ஆண்கள், 113 பெண்கள், 54 குழந்தைகள் உட்பட 500 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

மிக்-21 ரக 50 போர் விமானங்கள் இயக்கம் தற்காலிக நிறுத்தம்

புதுடெல்லி: அடிக்கடி நிகழும் விபத்துகளின் எதிரொலியாக மிக்-21 ரக போர் விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

ராஜஸ்தானின் சூரத்கார் பகுதியில் கடந்த 8ஆம் தேதி பயிற்சியில் ஈடுபட்ட மிக்-21 ரக விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாராசூட்டைப் பயன்படுத்தி விமானி பாதுகாப்பாக உயிர்தப்பினார். அதேநேரத்தில் விமானம் ஒரு வீட்டின் மீது விழுந்ததில், வீட்டில் இருந்த இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர்.

இதையடுத்து, தற்போது பயன்பாட்டில் உள்ள 50 மிக்-21 ரக போர் விமானங்களின் இயக்கத்தை விமானப்படை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.