ராய்ப்பூர்: வயது என்பது வெறும் எண்தான் என்பதை நினைவூட்டும் வகையில், சத்தீஸ்கர் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.எஸ். சிங் தியோ, தனது 70 வயதில் 'ஸ்கை டைவிங்' சாகசத்தில் ஈடுபட்டு பலரையும் வியக்க வைத்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தின் சர்குஜா மகாராஜா குடும்பத்தைச் சேர்ந்த இவர், அரசு முறைப் பயணமாக அண்மையில் ஆஸ்திரேலியா சென்றிருந்தார். அங்கு, 'ஸ்கை டைவிங்' எனப்படும் விமானத்தில் இருந்து குதித்து தரை இறங்கும் சாகசத்தில் ஈடுபட்டார். பயிற்சியாளரின் வழிகாட்டு தலுடன் சாகசம் செய்த அமைச் சர் தியோ, இதுகுறித்த காணொளியைத் தன் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதைப்பார்த்த சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், "இந்த வயதிலும் துணிச்சலுடன் சாகசம் புரிந்துள்ள மகாராஜாவுக்குப் பாராட்டுகள்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
"வானத்தின் எல்லைக்கு எல்லையே இல்லை ஒருபோதும்! ஆஸ்திரேலியாவில் 'ஸ்கை டைவிங்' செல்ல அற்புத வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே அபூர்வமான, உற்சாகமான, மிகவும் மகிழ்ச்சியான அனுபவ மாக இருந்தது," என டுவிட்டரில் அமைச்சர் தியோ பதிவிட்டுள்ளார்.
அனுபவமிக்க பயிற்சியாளர் ஒருவருடன் ஆஸ்திரேலி யாவில் 'ஸ்கை டைவிங்' சாகசத்தில் ஈடுபடும் அமைச்சர் தன் கட்டைவிரலை உயர்த்திக் காட்டுகிறார்.
படம்: ஊடகம்

