'2000 ரூபாயை மாற்ற அவசரம் வேண்டாம்'

'2000 ரூபாயை மாற்ற அவசரம் வேண்டாம்'

1 mins read
51f291c1-b180-4502-9bff-60cf4aecc2a2
-

மும்பை: போதுமான அவகாசம் இருப்பதால் ரூ.2000 நோட்டுகளை மாற்ற அவசரம் காட்ட வேண்டாம், வங்கிகளில் குவிய வேண்டாம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கேட்டுக்கொண்டு உள்ளார். பண நிர்வாகத்தின் ஒரு பகுதியாகவே 2000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

செப்டம்பர் 30க்குப் பிறகும் இந்த நோட்டுகள் சட்டப்படி செல்லக்கூடியதாக இருக்கும் என்று கூறியவர், அது எப்படி என்பதை விவரிக்கவில்லை.

இதனிடையே, ஹைதராபாத் பெட்ரோல் நிலையத்தில் 1,000க்கு மேல் உள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே ரூ.2000 நோட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சனிக்கிழமை முதல் நகை விற்பனை 10% முதல் 20% வரை அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2000 ரூபாய் பணத்தை தங்கம், வெள்ளி நகைகளில் முதலீடு செய்வதே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.