'டோக் பிசின்' மொழியில் திருக்குறள் வெளியீடு

'டோக் பிசின்' மொழியில் திருக்குறள் வெளியீடு

2 mins read
bf05041f-0aee-42bd-b7f6-9c9fc9d37b40
-

போர்ட் மோர்ஸ்பி: பாப்­புவா நியூ கினியா நாட்­டுக்­குச் சென்­றுள்ள பிர­த­மர் நரேந்­திர மோடி, அங்கு பேசப்­பட்டு வரும் 'டோக் பிசின்' (Tok Pisin) மொழி­யில் மொழி­பெயர்க்­கப்­பட்ட திருக்­கு­றள் நூலை வெளி­யிட்­டார்.

பிர­த­மர் மோடி, ஜப்­பான் பய­ணத்தை முடித்­துக்கொண்டு, ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு பசி­பிக் தீவு நாடான பாப்­புவா நியூ கினியா சென்றடைந்­தார்.

அந்­நாட்­டுப் பிர­த­மர் ஜேம்ஸ் மராப்பே, பிர­த­மர் மோடி­யின் காலைத்தொட்டு வணங்கி வர­வேற்­றார். அதன்பின்னர் நடந்த சந்திப்பில், 'டோக் பிசின்' மொழி­யில் மொழிமாற்­றம் செய்­யப்­பட்ட திருக்­கு­றள் பதிப்பைப் பிர­த­மர் மோடி வெளி­யிட்­டார்.

டுவிட்டரில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, "டோக் பிசின்' மொழியில் திருக்குறளை வெளியிட்டதில் எங்கள் இருவருக்கும் பெருமை. குறள் ஒரு தலைசிறந்த படைப்பு, இது பல்வேறு துறைகளில் மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்குகிறது," எனக் குறிப்பிட் டுள்ளார்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், முதலீடு, ஆரோக்கியம், திறன் மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளிலும் உறவைப் பலப் படுத்துவது குறித்து இரு தலை வர்களும் கலந்துரையாடினர்.

பாப்புவா நியூ கினியாவில் (பிஎன்ஜி) நடைபெற்ற உச்சி மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி பசிபிக் தீவுகளுக்கு ஆதர வளிப்பதாக உறுதியளித்தார்.

இந்தியா-பசிபிக் தீவுகள் ஒத்துழைப்பு மன்றத்தின் 14 தலைவர்களிடமும் பிரதமர் மோடி, இந்தியா சிறிய தீவு மாநிலங்களுக்கு நம்பகமான வளர்ச்சிப் பங்காளியாக இருக்கும் என்று கூறினார்.

தகவல் தொழில்நுட்பம், விண்வெளித் தொழில்நுட்பம், சுகாதாரப் பாதுகாப்பு, உணவுப் பாதுகாப்பு, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் எங்களது திறன்கள், அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

இதனிடையே, இந்தியப் பிரதமர் மோடிக்கு, ஃபிஜி நாட்டின் உயரிய விருதினை அந்நாட்டுப் பிரதமர் சிதிவேணி ரபுகா வழங்கி கௌரவித்தார்.