தாயின் சிரமம் போக்க கிணறு தோண்டிய சிறுவன்

தாயின் சிரமம் போக்க கிணறு தோண்டிய சிறுவன்

1 mins read
230f2c94-5ec8-48e5-a8d1-0dbae77de867
-

மும்பை: மகா­ராஷ்­டிர மாநி­லத்­தின் கெல்வே கிரா­மத்தைச் சேர்ந்த 14 வயது சிறு­வன் பிர­ணவ் சல்­கர். ஒன்­ப­தாம் வகுப்­பில் படித்­து­வ­ரும் பிர­ணவ், தன் அம்மா பல கிலோ மீட்­டர் தூரம் நடந்து சென்று தண்­ணீ­ர் தூக்கி வரு­வதைக் கண்டு வேத­னைப்­பட்டான்.

இதை­ய­டுத்து, தனது குடிசை வீட்­டுக்கு அரு­கில் உள்ள இடத்­தில் ஒரு கிணறு தோண்ட ஆரம்­பித்­தான். ஐந்து நாள்­களில் பிர­ணவ் 20 அடி ஆழத்­துக்கு தோண்­டிய கிணற்­றில் இருந்து தண்­ணீர் பொங்­கி­யது (படம்).

"மிகவும் மகிழ்ச்சி, இனி அம்மா தின­மும் ஆற்­றுக்குத் தண்­ணீர் தேடிச் செல்­ல­வேண்­டி­ய­ தில்லை," என்று பிர­ணவ் கூறி­ய­தாக டைம்ஸ் ஆஃப் இந்­தியா ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கோடை வெயி­லை­யும் பொருட்­ப­டுத்­தா­மல் கிணறு தோண்­டும் பணி­யில் அயராது ஈடு­பட்டதால், இந்தக் கிணறு தற்­போது பிர­ணவ் குடும்­பத்­தின் பெரு­மை­யான சொத்­தாக மாறி­யுள்­ளது. பிர­ண­வின் ஆசி­ரி­ய­ரும் நண்பர்களும் கிணற்றை பார்­வை­யிட்டுச் சென்­றனர். கிரா­மத் தலை­வர் பிர­ணவ் வீட்­டுக்கு அடிப்­படை வச­தி­களைச் செய்து கொடுக்க முன்­வந்­துள்­ளார்.