ஜி20 மாநாடு: பலத்த பாதுகாப்பு

ஜி20 மாநாடு: பலத்த பாதுகாப்பு

1 mins read
2f360bde-bd2d-432e-8f21-07fe22dd87c2
-

ஸ்ரீந­கர்: ஜம்மு-காஷ்­மீர் தலை­ந­கர் ஸ்ரீந­க­ரில் ஜி-20 மாநாடு நேற்று தொடங்­கி­யது. சுற்­று­லாத்­துறை சார்ந்த பணிக் குழு­வின் மூன்றாவது கூட்­டம் இங்­குள்ள ஷேர்-இ-காஷ்­மீர் அனைத்­து­லக மாநாட்டு மையத்­தில் மூன்று நாள்­க­ளுக்கு நடை­பெ­று­கிறது.

சீனா­வும் பாகிஸ்­தா­னும் சர்ச்­சைக்­கு­ரிய பகு­தி­யில் இந்நிகழ்வை நடத்­து­வ­தைக் கண்­டித்­துள்­ளன.

ஸ்ரீந­க­ரில் நடை­பெ­றும் கூட்­டத்­தில் ஜி20 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 180 பிர­தி­நி­தி­கள் பங்­கேற்­கின்­ற­னர். இதை­ய­டுத்து, மாநாட்­டில் எந்­த­வித அசம்­பா­வித சம்­ப­வ­மும் நிக­ழா­மல் தடுப்­ப­தற்­காக காவல்­துறை, ராணு­வம், மத்­திய ரிசர்வ் காவல் படை, தேசிய பாது­காப்­புப் படை, கடற்­படை என பல அடுக்கு பாது­காப்பு போடப்­பட்டுள்­ளது.

ரஜோ­ரி­யில் வாக­னங்­கள் தீவிர சோத­னைக்­குப் பின்­னரே அனு­மதிக்­கப்­ப­டு­கின்­றன. ஜம்மு எல்­லையை ஒட்­டிய செனாப் ஆற்­றில் எல்லை பாது­காப்­புப் படை­யி­னர் இரவு-பக­லாக சுற்றுக்காவல் பணி­யில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

சுற்றுலா தொடர்பான முதல் கூட்டம் குஜ ராத்திலும் 2வது கூட்டம் மேற்கு வங்காளத்திலும் நடைபெற்றன.