ஐந்து மாநிலத் தேர்தல்: கார்கே ஆலோசனை

ஐந்து மாநிலத் தேர்தல்: கார்கே ஆலோசனை

1 mins read
75707cff-bb00-4ba4-b0e2-832fd2e8b9dc
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தில் கிடைத்த மாபெ­ரும் வெற்­றி­யைத் தொடர்ந்து, அடுத்ததாக தேர்­தல் நடை­பெற உள்ள ஐந்து மாநி­லங்­க­ளி­லும் ஆட்­சி­யைக் கைப்­பற்­று­வது குறித்து காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே நாளை ஆலோ­சனை நடத்த உள்­ளார்.

கடந்த சில ஆண்­டு­க­ளாகத் தொடர் தோல்­வி­க­ளைக் கண்டு வந்த காங்­கி­ரஸ் கட்­சிக்கு கர்நா டகா தேர்­தல் வெற்றி மிகப்­பெ­ரும் ஊக்­கத்தை அளி­த­துள்­ளது.

இதை­ய­டுத்து, அடுத்த தேர்­தல் நடை­பெற உள்ள மத்­தி­யப் பிர­தே­சம், ராஜஸ்­தான், சத்­தீஸ்­கர், தெலுங்­கானா, மிசோ­ரம் ஆகிய ஐந்து மாநி­லங்­க­ளி­லும் ஆட்­சி­யைக் கைப்­பற்ற காங்­கி­ரஸ் தயா­ராகி வரு­கிறது.

ராஜஸ்­தான், சத்­தீஸ்­கர் மாநி­லங்­களில் ஏற்­கெ­னவே காங்­கி­ரஸ் ஆட்சி நடந்து வரும் நிலை­யில், அதை தக்­க­வைக்க வியூ­கம் வகுத்து வரு­கிறது.

இதேபோல் தெலுங்­கானா, மத்­தி­யப்­பி­ர­தே­சம், மிசோ­ரம் மாநி­லங்­க­ளி­லும் சூழ்­நி­லையை ஆய்வு செய்து வரு­கின்றனர்.

இந்­தச் சூழ­லில் தேர்­தல் நடை­பெற உள்ள ஐந்து மாநி­லங்­க­ளைச் சேர்ந்த காங்­கி­ரஸ் தலை­வர்­க­ளு­டன் கார்கே தனித்­த­னி­யாக நாளை ஆலோ­சனை நடத்த திட்டமிட்­டுள்­ளார்.

அப்­போது உட்­கட்சி பூச­லைக் கையா­ளு­தல், மக்­கள் எதிர்­பார்க்­கும் வாக்­கு­று­தி­கள் உள்­ளிட்ட அம்­சங்­கள் குறித்து விவா­திக்­கப்­­பட உள்­ள­தாக காங்­கி­ரஸ் வட்­டா­ரத் தகவல்கள் தெரி­வித்­தன.