தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் இருமல் மருந்துக்குக் கட்டாய சோதனை

1 mins read
86021e51-0c51-41ac-b0f7-967bcd674226
உலகளவில் ஆகப் பெரிய மருந்துத் துறையைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் அடங்கும். கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இருமல் மருந்துகள் ஏற்றுமதியாவதற்கு முன்பு அவற்றை சோதனைக்கு உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

கேம்பியாவிலும் கசாக்ஸ்தானிலும் இந்தியாவில் தயாரான இருமல் மருந்தை உட்கொண்ட பல சிறுவர்கள் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய விதிமுறையின்படி இந்தியாவில் தயாராகும் எல்லா இருமல் மருந்துகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு அரசாங்க ஆய்வுக்கூடத்திடமிருந்து சான்றிதழ் பெறவேண்டும்.

வரும் ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து விதிமுறை நடப்புக்கு வரும்.