ராகுல் காந்தியின் நள்ளிரவு லாரி பயணம்

2 mins read
2a4392e8-c4d1-4e7b-8d8a-3716f6dc7ec9
-

புது­டெல்லி: காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ராகுல் காந்தி, நேற்­று முன்தினம் இரவு திடீ­ரென்று தனது காரை நிறுத்தி லாரி­யில் பய­ணம் மேற்­கொண்ட சம்­ப­வம் இணை­யத்­தில் பரவி வரு­கிறது.

கர்­நா­டக சட்­டப்­பே­ர­வைத் தேர்­த­லில் காங்­கி­ரஸ் கட்சி மாபெ­ரும் வெற்றி பெற்­ற­தற்­கான முக்­கிய கார­ணங்­களில் ஒன்று ராகுல் காந்­தி­யின் இந்திய ஒற்றுமை நடைப்­ப­ய­ணம் என்று கூறப்­ப­டு­கிறது.

கன்­னி­யா­கு­மரி முதல் காஷ்­மீர் வரை நடைப்­ப­ய­ணம் மேற்­கொண்டு மக்­க­ளைச் சந்­தித்து பிரச்சி­னை­க­ளைக் கேட்­ட­றிந்­தார்.

அதே­போல், டெல்­லி­யில் உள்ள சந்­தைப் பகு­தி­க­ளுக்குச் சென்று மக்­க­ளோடு இணைந்து சாலை­யோர உணவு சாப்­பிட்­டது, டெல்லி பல்­க­லைக்­க­ழக விடு­தி­யில் மாண­வர்­க­ளு­டன் இணைந்து உரை­யா­டி­யது என அண்­மை­ய­கா­ல­மாக அடிக்­கடி அனைத்­துத்­த­ரப்பு மக்­க­ளை­யும் ராகுல் காந்தி நேரில் சந்­தித்து உரை­யாடி வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தினம் இரவு டெல்­லி­யில் இருந்து சிம்­லா­வுக்கு காரில் பய­ணம் மேற்­கொண்ட ராகுல் காந்தி, திடீ­ரென்று டெல்லி - சத்­தீஸ்­கர் நெடுஞ்­சா­லை­யில் காரை நிறுத்தி, சாலை­யோர உண­வ­கங்­களில் நின்­றி­ருந்த லாரி ஓட்­டு­நர்­க­ளு­டன் உரை­யா­டி­னார். அதன்­பி­றகு, யாரும் எதிர்­பா­ராதவித­மாக தான் பய­ணம் செய்த காரை தவிர்த்து முர்­த­லில் இருந்து அம்­பலா வரை லாரி­யின் முன்­ப­கு­தி­யில் லாரி ஓட்­டு­ந­ரு­டன் அமர்ந்து பய­ணம் மேற்­கொண்­டார். இந்­தப் பய­ணத்­தின்­போது, லாரி ஓட்­டு­நர்­கள் சந்­திக்­கும் பிரச்­சினை­கள் மற்­றும் அவர்­க­ளின் வாழ்­வா­தா­ரம் குறித்து நீண்ட நேரம் உரை­யா­டி­னார். பின்­னர் அவர்­க­ளது லாரி­யில் ஏறி­னார்.

ஹரியானா மாநிலத்தின் அம்பாலாவில் இருந்து சண்­டி­கர் வரை காரில் பய­ணித்து, தொழி­லா­ளர்­க­ளின் கோரிக்­கை­களை கேட்­ட­றிந்­த­தோடு அவர்­கள் தங்­கும் இடத்­தை­யும் பார்­வை­யிட்­டார். இது தொடர்­பான புகைப்­ப­டங்­கள், வெளி­யான நிலை­யில் சமூக வலை­த்த­ளங்­களில் விவா­தம் தொடங்­கி­யுள்­ளது.

ஏழை, எளிய உழைக்­கும் மக்­க­ளின் பின்­னால் ராகுல் காந்தி எப்­போ­தும் இருக்­கி­றார் என்று காங்­கி­ரஸ் கட்­சி­யி­னர் கூறு­கின்­ற­னர்.

அது­மட்­டு­மல்­லா­மல் தொழில் அதிபர் அதா­னி­யு­டன் பிரதமர் நரேந்திரமோடி மோடி இருக்­கும் புகைப்­ப­டத்­தை­யும், லாரி ஓட்டுநர்களுடன் ராகுல் உரையாடும் புகைப்படங்களையும் இணைத்து வெளியிட்டுள்ளனர்.

கர்­நா­ட­கத் தேர்­தல் வெற்­றிக்குப் பிறகு பெரும் மகிழ்ச்­சி­யில் உள்ள ராகுல் காந்தி, திடீ­ரென்று லாரி­யில் பய­ணம் மேற்­கொண்ட சம்­ப­வம் அர­சி­யல் அரங்­கில் பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ராகுல் காந்தி லாரி ஓட்டுநர்களைச் சந்தித்துப் பேசியது குறித்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

ஹரியானாவில் லாரியில் பயணம் செய்த ராகுல் காந்தி, லாரி ஓட்டுநர்களின் வாழ்க்கையைப் பற்றி கேட்டு அறிந்துகொண்டார்.

படம்: ஊடகம்