ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலத்தின் எட்டா மாவட்டத்தில் விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை பேருந்து ஒன்று சுமார் 12 கி.மீ. இழுத்துச் சென்றது. இதில் மோட்டார் சைக்கிள் ஓட்டி உயிரிழந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை சாலையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அங்கிருந்த உணவுக் கடையோரமாக இளையர் விகாஷ் (32) என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே படுவேகத்தில் வந்த அரசுப் பேருந்து ஒன்று, அவரை மோதித்தள்ளிவிட்டு மோட்டார் சைக்கிளை 12 கி.மீ., தூரம் இழுத்துச் சென்றது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் விகாஷை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிர் இழந்தார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

