மணிப்பூரில் மீண்டும் கலவரம்; ராணுவ வீரர்கள் குவிப்பு

மணிப்பூரில் மீண்டும் கலவரம்; ராணுவ வீரர்கள் குவிப்பு

2 mins read
c6dc84e0-5b71-4e2d-a52e-7a0bf859be80
-

இம்­பால்: மணிப்­பூ­ரின் தலை­ந­கர் இம்­பா­லில் மேதே மற்­றும் குக்கி சமூ­கத்­தி­னர் நேற்று மீண்­டும் மோதிக்­கொண்­ட­னர். அவர்­கள் உள்­ளூர் சந்­தை­யில் ஏற்­பட்ட இடப்­பி­ரச்­சி­னையே அவர்­கள் மோதிக்­கொண்­ட­தற்­குக் கார­ண­மா­கக் கூறப்­ப­டு­கிறது.

மணிப்­பூ­ரில் 64 விழுக்­காட்­டி­னர் வசிக்­கும் மேதேயி சமு­தாய மக்­கள் மலைப் பகு­தி­களில் நிலம் வாங்க அனு­மதி இல்லை.

மலைப் பகு­தி­களில் குக்கி இனப் பழங்­கு­டி­யி­னர் வசிக்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் மேதேயி சமு­தாய மக்­கள் தங்­க­ளுக்குப் பழங்­கு­டி­யி­னர் தகுதி வழங்­கப்­பட வேண்­டும் என்று கோரிக்கை விடுத்து வரு­கின்­ற­னர். இதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கும் வகை­யில் குக்கி பழங்­கு­டி­யி­னர் மணிப்­பூ­ரின் பல பகு­தி­களில் கடந்த மே 3ஆம் தேதி ஒற்­றுமை பேரணி நடத்­தி­னர்.

இந்­தப் பேர­ணி­யில் மேதேயி மற்­றும் குக்கி பழங்­கு­டி­யி­னர் இடையே கடு­மை­யான மோதல் ஏற்­பட்­டது.

அந்த மோத­லின்­போது ஏரா­ள­மான வீடு­களும், கடை­களும் தீவைத்­துக் கொளுத்­தப்­பட்­டன. இந்த கல­வ­ரத்­தில் எழு­ப­துக்­கும் மேற்­பட்­டோர் உயி­ரி­ழந்­த­னர்.

ஏரா­ள­மா­னோர் படு­கா­ய­ம­டைந்து சிகிச்சை பெற்­ற­னர்.

இந்த கல­வ­ரம் ஓய்ந்து மணிப்­பூ­ரில் இயல்­பு­நிலை திரும்­பிய நிலை­யில், தலை­ந­கர் இம்­பா­லில் மீண்­டும் மோதல் வெடித்­துள்­ளது.

நியூ­செக்­கான் என்ற இடத்­தில் உள்ள சந்­தை­யில் இடப்­பி­ரச்­சினை கார­ண­மாக இந்த மோதல் ஏற்­பட்­டது. கல­வ­ரத்­தைக் கட்­டுப்­ப­டுத்த அப்­ப­கு­தி­யில் ராணு­வத்­தி­ன­ரும் காவல்­து­றை­யி­ன­ரும் குவிக்­கப்­பட்­ட­னர். அங்கு மீண்டும் ஊர­டங்கு தீவி­ர­மாக அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கிழக்கு இம்­பால் மாவட்­டத்­தில் ஆயு­தங்­க­ளு­டன் சுற்­றிய கும்­ப­ல் 2 வீடு­க­ளுக்கு தீவைத்­தது. மேலும், கடை­களை அடைக்­கு­மாறு மிரட்­டி­ய­தால் பதற்­றம் ஏற்­பட்­டது.

இதை­ய­டுத்து, அங்கு வந்த ராணு­வத்­தினா், கண்ணீர்ப் புகை­குண்­டு­களை வீசி, கும்­பலை விரட்­டி­ய­டித்­தனா்.

இந்த நட­வ­டிக்­கை­யின்­போது சிலா் காய­ம­டைந்­த­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. ஆயு­த­மேந்­திய கும்­ப­லில் இருவா் கைது செய்­யப்­பட்­டனா்.

கிழக்கு இம்­பால் மாவட்­டத்­தில் ஊர­டங்கு தளா்த்­தப்­பட்­டி­ருந்த நிலை­யில், அது மீண்­டும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.