அகர்தலா: நாட்டின் எல்லைப் பகுதிகளில் கடத்தல்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்தியா - பங்ளாதேஷ் எல்லையில் ஏராளமான கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன.
இந்தியா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இடையே இயக்கப்படும் பேருந்தை அகர்தலாவில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சோதனை செய்தபோது, அதில் எண்ணற்ற கைப்பேசிகள் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
பேருந்தில் வந்த பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில், பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஒரு தகரம் மட்டும் அப்போதுதான் பொருத்தப்பட்டிருந்தது போல இருந்ததை அறிந்த படை வீரர்கள், உடனடியாக அந்தத் தகரத்தை அகற்றியபோது, அதில் 665 கைப்பேசிகள் இருந்ததைக் கண்டறிந்தனர். உடனடியாக, ஓட்டுநரும் நடத்துநரும் கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

