பெங்களூர்: கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது காங்கிரஸ்.
இந்நிலையில், கர்நாடக சட்டசபையை கோமியம் தெளித்து காங்கிரசார் சுத்தம் செய்தனர்.
பா.ஜ.க. ஆட்சியில் நடந்த ஊழலால் சட்டசபை புனிதம் கெட்டுவிட்டதாகவும், அதை சீர்படுத்த கோமியம் தெளித்ததாகவும் காங்கிரசார் தெரிவித்தனர். இதற்கிடையே, பா.ஜ.க. ஆட்சியின்போது அனுமதிக்கப்பட்ட திட்டங்களை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

