பெண் நீதிபதிகள்: நீதிமன்றத்தில் சுடிதார் போட்டுவர அனுமதிக்கவேண்டும்

பெண் நீதிபதிகள்: நீதிமன்றத்தில் சுடிதார் போட்டுவர அனுமதிக்கவேண்டும்

1 mins read
00c12625-b713-4566-a0ce-446ad021b91e
-

திரு­வ­னந்­த­பு­ரம்: பெண் நீதி­ப­தி­க­ளுக்­கான ஆடை விதி­மு­றை­யில் 53 ஆண்டு கால­மாக எவ்­வித மாற்­ற­மும் செய்­யப்­ப­ட­வில்லை. எனவே தற்­போது நாங்­கள் அணிந்­து­வ­ரும் ஆடை­யில் மாற்­றம் தேவை என்று கேரள நீதி­ப­தி­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இது குறித்து கேரள உயர் நீதி­மன்­றம் பரி­சீ­லித்து வரு­வ­தா­கத் தெரி­கிறது. இப்­போ­துள்ள நீதி­ப­தி­க­ளுக்­கான ஆடை விதி­மு­றை­யில், பெண் நீதி­ப­தி­கள் சேலை, வெள்ளை கழுத்­துப்­பட்டை, கறுப்­பு­நிற மேலங்கி அணிய வேண்­டி­யி­ருக்­கிறது. இது கோடை காலத்­தில் மிக­வும் சிர­ம­மாக உள்­ளது என்­றும் அவர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இந்­நி­லை­யில் கேரள நீதி­மன்ற பெண் நீதி­ப­தி­கள் சுமார் 100 பேர் கேரள நீதி­மன்­றப் பதி­வா­ள­ரி­டம் ஆடை மாற்­றம் குறித்த கோரிக்­கையை முன்­வைத்­துள்­ள­னர்.

நீதி­மன்­றப் பணி­யின்­போது சுடி­தார் அணிய அனு­ம­திக்க வேண்­டும் என்று அவர்­கள் கூறி­னர். தெலுங்­கானா உயர் நீதிமன்றம் கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வெளி­யிட்ட சுற்­ற­றிக்­கை­யை­யும் அவர்­கள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ள­னர்.

அந்த சுற்­ற­றிக்­கை­யில், பெண் நீதி­ப­தி­கள் பணி­யின்­போது வழக்­க­மான சேலை­யு­டன், சல்­வார், சுடி­தார், நீள­மான பாவாடை, பேண்ட் அணி­ய­லாம். அவை வெள்ளை, வெளிர் மஞ்­சள், சாம்­பல், கறுப்பு வண்­ணத்­திலோ, அவற்­றின் கல­வை­யிலோ இருக்­க­லாம் என தெரி­வித்­தி­ருந்­தது.