பெங்களூரில் கனமழை; போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கை

2 mins read
2030b002-22aa-43e8-8599-2c4cc69bd731
-

பெங்­க­ளூரு: கர்­நா­டக மாநி­லத்­தின் பல மாவட்­டங்­களில் பரு­வ­மழை காலத்­திற்கு முன்­கூட்­டியே மழை பெய்­யத் தொடங்­கி­விட்­டது. இந்­நி­லை­யில் பெங்­க­ளூர் மற்­றும் பழைய மைசூர் ஆகிய நக­ரங்­களில் கடந்த நான்கு நாள்­க­ளாக கன­மழை பெய்து வரு­கிறது.

தொடர்ந்து மழை பெய்து வரு­வ­தால் பல இடங்­களில் சாலை­களும், சுரங்­கப் பாதை­களும் மழை நீரில் மூழ்கி சாலைப் போக்­கு­வ­ரத்து முடங்­கி­யது. சில இடங்­களில் வாக­னங்­கள் செல்­வ­தற்­குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்டு நாள்­க­ளுக்கு முன்பு கே.ஆர்.சர்க்­கிள் பகு­தி­யில் உள்ள சுரங்­கப்­பாதை மழை நீரால் நிரம்­பி­யி­ருந்­தது. அந்த நீரில் மூழ்கி இளம் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார்.

பெங்­க­ளூரு மட்­டு­மல்­லா­மல் பழைய மைசூர் பகு­தி­யி­லும் தொடர் மழை­யால் மக்­க­ளின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

மழை­யு­டன் சேர்ந்து சூறைக்­காற்­றும் வீசு­வ­தால் சாலை ஓரங்­களில் உள்ள ஏரா­ள­மான மரங்­கள் வேரு­டன் சாய்ந்து விழுந்­த­தால் போக்­கு­வ­ரத்து பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கக் கூறப்­படு­கிறது.

பல இடங்­களில் மின் கம்­பங்­களும் சேதம் அடைந்­த­தால் பல பகு­தி­களில் மின்­தடை ஏற்­பட்­டுள்­ளது. இத­னால் பெங்­க­ளூரு மக்­க­ளின் இயல்­பு­நிலை பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

பெங்­க­ளூ­ரு­வில் சில இடங்­களில் சூறைக்­காற்­று­டன் ஆலங்­கட்டி மழை­யும் கொட்­டி­யது.

பழைய மைசூரு பகு­தி­யும் கன­ம­ழை­யால் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், இந்த மழைப் பாதிப்­பில் இருந்து பெங்­க­ளூரு மக்­களை மீட்­ப­தற்­கா­க­வும் சேத­மடைந்த சாலை­க­ளைச் சரி­செய்­ய­வும் போர்க்­கால நட­வ­டிக்­கை­களைத் தொடங்­கு­மாறு அதி­கா­ரி­க­ளுக்கு முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மையா உத்­த­ர­விட்­டுள்­ளார். மேலும், மழை வெள்­ளத்­தில் இருந்து மக்­களை மீட்­ப­தற்­கும், அவர்­க­ளுக்­குத் தேவை­யான நிவா­ரண உத­வி­களைச் செய்­வ­தற்­கும் 60க்கும் மேற்­பட்ட கட்­டுப்­பாட்டு நிலையங்களைத் திறக்­கு­மா­றும் அவர் உத்­த­ர­விட்­டுள்­ளார். அதன்­படி கட்­டுப்­பாட்டு நிலையங்கள் அமைக்­கும் பணி­களை அதி­கா­ரி­கள் தொடங்­கி­யுள்­ள­னர். ஜூன் 1-ஆம் தேதிக்­குள் அவை செயல்­பாட்­டுக்கு வரும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பெங்­க­ளூ­ரு­வின் கடு­மை­யாகப் பாதிக்­கப்­பட்ட பகு­தி­களில் ஒன்­றான சிலிக்­கான் சிட்டி பகு­தி­யில் 4 அடி ஆழ பள்­ளம் உரு­வா­னது. இது கடந்த 15 நாள்களில் உரு­வா­கும் மூன்­றா­வது பள்­ள­மா­கும்.

கன­மழை கார­ண­மாக கடந்த மூன்று மாதங்­களில் மட்­டும் 56 பேர் உயி­ரி­ழந்­த­தாக அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தலா ரூ.5 லட்­சம் நிதி­யு­தவி அளிக்­கப்­படும் என முத­ல­மைச்­சர் சித்­த­ரா­மையா அறி­வித்­துள்­ளார்.